தமிழ்மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது: மு.க.ஸ்டாலின்

தமிழ்மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 
தமிழ்மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது: மு.க.ஸ்டாலின்

தமிழ்மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பாஜக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். 

இதுகுறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
இளைஞர் அணியில் 30 இலட்சம் இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற இலக்கை வைத்து உதயநிதி அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருப்பது அவருடைய வேலை – கடமை. அந்த வேலையை அவர் செய்துக் கொண்டிருக்கிறார். பா.ஜ.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்குப் பிறகு, இது போன்று 2ஆவது முறையாக தொடர்ந்து தமிழ் மொழிக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடிய வகையில் ரயில்வேயில், தபால் அலுவலகங்களில், அது தேர்வாக இருந்தாலும், வேலை வாய்ப்பாக இருந்தாலும், அறிக்கைகளாக இருந்தாலும் அவைகளில் எல்லாம் தமிழ் இடம்பெறக் கூடாத ஒரு நிலையை, முயற்சியில் ஈடுபட்டார்கள். 

அதனை, ‘முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்’ என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து பல போராட்டங்களை முன்னெடுத்து நடத்தி, அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்தியதற்குப் பிறகு அவைகள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டிருக்கினறது. ஆனால், திடீரென்று இன்று அமித்ஷா கூறியதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சியளிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. எனவே, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இது நிச்சயம் அமையும். எனவே, அக்கருத்தை அவர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் வலியுறுத்துகிறேன். 

நாளைய தினம் திருவண்ணாமலை மாவட்டத்தில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முப்பெரும் விழா நிகழ்ச்சி முடிந்த மறுநாள், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து இதனை எப்படி சந்திப்பது? எப்படி நம்முடைய எதிர்ப்புக் குரலை கொடுப்பது? என்பது பற்றி கலந்து பேசி முடிவெடுத்து அதற்குப் பிறகு அறிவிக்க இருக்கிறோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com