குடிமைப் பணிகள்  முதல்நிலை தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி: விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி

தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தின் சார்பில் வழங்கப்படும் கட்டணமில்லா பயிற்சிக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (செப்.16) கடைசி நாளாகும்.


தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தின் சார்பில் வழங்கப்படும் கட்டணமில்லா பயிற்சிக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (செப்.16) கடைசி நாளாகும்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான மத்திய பணியாளர் தேர்வாணைய (யுபிஎஸ்சி) தேர்வுகளை எழுதும் ஏழை மாணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, அந்தத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சியை தமிழக அரசு அளித்து வருகிறது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையம் மூலமாக இந்தப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்போது குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சியை இந்த நிறுவனம் தொடங்க உள்ளது. 
இந்த ஆறு மாத கால பயிற்சிக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 16 கடைசி நாளாகும். இதற்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை civilservicecoaching.com என்ற இணையதளத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com