அண்ணாவின் பாதையில் இருந்து விலகினால் நாட்டுக்கு கேடு: மு.க.ஸ்டாலின்

அண்ணா வகுத்து தந்த பாதையிலிருந்து ஆட்சியாளர்கள் விலகினால் தமிழுக்கு மட்டுல்ல, இந்தியாவுக்கும் கேடு விளையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அண்ணாவின் பாதையில் இருந்து விலகினால் நாட்டுக்கு கேடு: மு.க.ஸ்டாலின்

அண்ணா வகுத்து தந்த பாதையிலிருந்து ஆட்சியாளர்கள் விலகினால் தமிழுக்கு மட்டுல்ல, இந்தியாவுக்கும் கேடு விளையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அண்ணாவின் 111-ஆம் ஆண்டு பிறந்த நாள் செப்டம்பர் 15-ஆம் தேதியாகும். தமிழின் மேன்மைக்கும் தமிழரின் வாழ்வுக்கும் தன் இறுதிமூச்சுவரை அயராமல் குரல் கொடுத்தவர். 1962-ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக அவர் நாடாளுமன்றத்தில் நுழைந்தபோது, இந்தியத் துணைக்கண்டம் அதுவரை கேட்டிராத உரிமைக்குரலைக் கேட்டது. அந்தக் குரல், திராவிட இனத்தின் குரல், தமிழ் எனும் மூத்த மொழியின் குரல், தன்னைப் போன்ற மாநில மொழிகள் அனைத்துக்குமான குரல்.

நான் திராவிட இனத்தைச் சார்ந்தவன்.இப்படிக் கூறுவதால் நான் வங்காளிக்கோ, மராட்டியருக்கோ, குஜராத்தியருக்கோ எதிர்ப்பாளன் அல்ல என்ற அண்ணாவின் உரைவீச்சு புதிய சிந்தனையைக் கிளறியது.

அரை நூற்றாண்டுக்கும் மேலாக அந்த சிந்தனைதான் இந்திய ஒன்றியத்தின் பல பகுதிகளிலும் வளர்ந்து வலுப்பெற்று வருகிறது. அதுதான் மாநில உரிமைகளைப் பாதுகாத்து, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைக் கட்டிக் காத்து வருகிறது. 
இன்றோ, எப்பக்கத்திலிருந்தாவது எப்படியாவது ஹிந்தியைத் திணித்துவிட முடியாதா என்று மத்திய பாஜக அரசு பலவித முயற்சிகளைச் செய்து நுழைக்கப் பார்க்கிறது. 

இந்தியா பயணிக்க வேண்டிய பாதையை அன்றே தில்லிக்கு சுட்டிக்காட்டியவர் அண்ணா. அந்தப் பாதையிலிருந்து 

ஆட்சியாளர்கள் விலகினால் அது  தமிழுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் கேடு விளைவித்துவிடும். அதனால்தான், தமிழ் மொழியைக் காக்க அண்ணா வகுத்துத் தந்த வழியில் வாய்மையுடன் நடைபோடுகிறோம், போராடுகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com