ஈஷா சார்பில் 350 நாற்றுப் பண்ணைகள் அமைக்கத் திட்டம்

தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் உள்ள காவிரி வடிநிலப் பகுதிகளில் ஈஷா சார்பில் 350 நாற்றுப் பண்ணைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்.
தஞ்சாவூர் அருகே கொ. வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் உள்ள  ஈஷா நாற்றுப் பண்ணையில்  மரக்கன்றுகள் உருவாக்கத்தைப் பார்வையிட்ட ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்.
தஞ்சாவூர் அருகே கொ. வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் உள்ள  ஈஷா நாற்றுப் பண்ணையில்  மரக்கன்றுகள் உருவாக்கத்தைப் பார்வையிட்ட ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் உள்ள காவிரி வடிநிலப் பகுதிகளில் ஈஷா சார்பில் 350 நாற்றுப் பண்ணைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ்.
காவிரி நதிக்குப் புத்துயிரூட்ட தலைக்காவிரி முதல் திருவாரூர் வரை ஜக்கி வாசுதேவ் மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்த அவர் கொ. வல்லுண்டாம்பட்டு கிராமத்தில் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணையை சனிக்கிழமை பார்வையிட்டு தெரிவித்தது:
தஞ்சாவூரில் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணை ஒரு வித்தியாசமான முறையில் உள்ளது. நம் தன்னார்வத் தொண்டர்கள் இங்கு மிகவும் ஈடுபாட்டுடன் மரக்கன்றுகளை வளர்த்து வருகின்றனர். இங்கு அனைத்து மரக் கன்றுகளையும் முழுக்க முழக்க இயற்கை முறையில் வளர்க்கிறோம். எந்த ரசாயன உரங்களையும் பயன்படுத்துவது இல்லை.
இயற்கை முறையில் வளர்த்தால் ஒரு மரக்கன்று விற்கும் நிலைக்கு வருவதற்கு 9 முதல் 15 மாதங்கள் ஆகும். ஆனால், தொழில் ரீதியாக மரக்கன்று விற்போர் யூரியா போட்டு 3 முதல் 5 மாதங்களில் மரக்கன்று வளர்க்கின்றனர். இப்படி வளர்த்தால் அவை எப்படி மரமாக மாறும் என்பது ஒரு பெரிய கேள்வி.
மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு அனைத்து ஈஷா நாற்றுப் பண்ணைகளுக்கும் மகாத்மா இந்தியா கிரீன் மிஷன் என பெயர் கொடுக்க உள்ளோம். ஏனென்றால், கிராமங்களில் வாழ்பவர்கள் வளமாகவும் நலமாகவும் வாழ வேண்டும் என்பது காந்தியின் கனவு. அவரின் கனவை நனவாக்க உறுதி எடுத்துள்ளோம்.
இப்போது நம்மிடம் 35 நாற்றுப் பண்ணைகள் உள்ளன. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் காவிரி வடிநிலப் பகுதிகளில் 350 நாற்றுப் பண்ணைகளை அமைக்க உள்ளோம். மேலும், நாற்றுப் பண்ணை உருவாக்குவது குறித்து 10,000 விவசாயிகளுக்குப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். இது அவர்களுடைய பொருளாதாரத்துக்குப் பயனளிக்கும் என்றார் ஜக்கி வாசுதேவ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com