காங்கேயம் இன காளைகளுக்கு புதிய சந்தை தொடக்கம்

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே பழையகோட்டையில் காங்கேயம் இன காளைகளுக்கான புதிய சந்தை சனிக்கிழமை தொடங்கப்பட்டது. முதல் நாளில் ரூ.15 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள் விற்பனையாகின.
பழையகோட்டையில் நடைபெற்ற காங்கேயம் இன காளைகளுக்கான  சந்தையில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்பனையான எருது ஜோடி.
பழையகோட்டையில் நடைபெற்ற காங்கேயம் இன காளைகளுக்கான  சந்தையில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்பனையான எருது ஜோடி.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே பழையகோட்டையில் காங்கேயம் இன காளைகளுக்கான புதிய சந்தை சனிக்கிழமை தொடங்கப்பட்டது. முதல் நாளில் ரூ.15 லட்சத்துக்கு காங்கேயம் இன காளைகள் விற்பனையாகின.
 பாரம்பரியமிக்க காங்கேயம் இன மாடுகளின் முக்கியத்துவம் அறிந்து, காங்கேயம் இன காளைகள், மாடுகளைப் பாதுகாக்கும் முயற்சியாக காங்கயத்தை அடுத்துள்ள பழையகோட்டையில் பிரத்யேக சந்தை கடந்த 2016}ஆம் ஆண்டு முதல் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சந்தையில் காங்கேயம் இன காளைகள், பசுக்கள், கன்றுக்குட்டிகள் கொண்டுவரப்பட்டு, விற்பனை நடைபெற்று வருகிறது.
 இந்நிலையில் இந்த சந்தை வளாகத்தில் புதிதாக காங்கேயம் இன காளைகளுக்காக மட்டும் மாதந்தோறும் 2}ஆவது சனிக்கிழமை சந்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்த சந்தையை பெங்களூரு காவல் துறை துணை ஆணையர் அண்ணாமலை சனிக்கிழமை (செப். 14) தொடக்கி வைத்தார்.
 முதல் நாளில் 80 காங்கேயம் இனக் காளைகள், கன்றுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன. இதில் 25 காளைகள் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு விற்பனையாகின. அதிகபட்சமாக பூச்சி வகையைச் சேர்ந்த காங்கேயம் காளை ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்பனையானது. எருதுக் கன்றுகள் ஒரு ஜோடி ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு விற்பனையாயின.
 இந்த சந்தையில் 7 ரேக்ளா வண்டிகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு, 4 வண்டிகள் விற்பனையாகின. அதிகபட்சமாக ஒரு ரேக்ளா வண்டி ரூ.90 ஆயிரத்துக்கு விற்பனையானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com