காவல் துறையில் 130 பேருக்கு அண்ணா பதக்கம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

காவல் துறையில் 130 பேருக்கு அண்ணா பதக்கம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு
காவல் துறையில் 130 பேருக்கு அண்ணா பதக்கம்: முதல்வர் பழனிசாமி உத்தரவு

தமிழக காவல் துறையில் பணியாற்றும் 130 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்க முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, சிறைத் துறை, ஊர்க்காவல் படை, விரல் ரேகைப் பிரிவு, தடய அறிவியல் துறை ஆகியவற்றில் சிறப்பாகப் பணியாற்றும் அதிகாரிகளும், அலுவலர்களும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்படுகின்றனர். அவர்களின் பணியைப் பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ஆம் தேதியன்று அண்ணா பிறந்த நாளில் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல் முதல்நிலை காவலர் வரையிலான 100 அலுவலர்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையில் மாவட்ட அலுவலர் முதல் தீயணைப்பு வீரர் நிலை வரையிலான 10 பேருக்கும், சிறைத் துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக் காவலர் வரையிலான 10 பேருக்கும், ஊர்க்காவல் படையில் 5 பேருக்கும், விரல் ரேகைப் பிரிவில் 2 பேருக்கும், தடய அறிவியல் துறையில் 2 அதிகாரிகளுக்கும் தமிழக முதல்வரின் அண்ணா பதக்கம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மணல் திருட்டு தடுப்பு: பதக்கங்கள் பெறும் அலுவலர்களுக்கு அவரவர் தம் பதவிக்கேற்றவாறு பதக்க விதிகளின்படி ஒட்டுமொத்த மானியத் தொகையும் வெண்கல பதக்கமும் அளிக்கப்படும். மேலும், தமிழக முதல்வரின் வீரதீர செயலுக்கான காவல் பதக்கமானது முதல்நிலைக் காவலர் எஸ்.ஜெகதீஷ் துரைக்கு மரணத்துக்குப் பிந்தைய விருதாக அளிக்கப்படுகிறது.

அவர் மணல் திருட்டைத் தடுக்கும் போது தனது உயிரை இழந்தார். அவரது குடும்பத்துக்கு வெகுமதியாக ரூ.5 லட்சம் அளிக்கப்படும். பிரிதொரு நாளில் நடைபெறும் விழாவில் பதக்கங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்குவார் என்று தனது அறிவிப்பில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com