திரையரங்கு வளாகத்தில் இடையூறாக விளம்பர பதாகைகள் வைத்தால் நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு

திரையரங்கு வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதியின்றி  விளம்பரப் பதாகைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி- விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
சேலம் ஐந்து சாலை பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் அரசு அச்சகத்தை ஆய்வு செய்த  செய்தி- விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.  உடன்,  எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம்.
சேலம் ஐந்து சாலை பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் அரசு அச்சகத்தை ஆய்வு செய்த  செய்தி- விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.  உடன்,  எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம்.

திரையரங்கு வளாகத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதியின்றி  விளம்பரப் பதாகைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி- விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
சேலம் சிட்கோ தொழிற்பேட்டை அருகேயுள்ள சேலம் அரசு கிளை அச்சகத்தில் அவர் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.  பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:-
விளம்பரப் பதாகைகளைத் தவிர்ப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிக்கை மட்டுமே விடுத்தார். ஆனால்,  இதுதொடர்பாக ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நடத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிக்கை விடுத்தால் அதை எந்த அளவுக்கு அதிமுக தொண்டர்கள் கடைப்பிடிப்பார்களோ, அதே அளவு முதல்வர்,  துணை முதல்வரின் அறிக்கையும் கடைப்பிடிக்கப்படும்.
சென்னையில் பேனர் விழுந்து இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் எதிர்பாராமல் நடந்தது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு பொறுப்பேற்க முடியாது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திரையரங்குகளில் விளம்பரப் பதாகைகள் வைப்பது குறித்து கண்காணிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட இடத்தைத் தவிர்த்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் விளம்பரப் பதாகைகள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்படும்.
அரசு ஆவணங்கள் அரசு அச்சகங்களில் அச்சடிப்பு: தமிழக அச்சகத் துறை வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 13 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் ரூ.26 கோடியில் மேம்படுத்தப்பட்ட மைய அச்சகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்குத் தேவையான ஆவணங்களை அச்சடிக்க சென்னை,  மதுரையில் இரண்டு கிளை அச்சகங்கள் திறக்கப்பட்டுள்ளன.  இதுதவிர திருச்சி, புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அச்சகங்கள் நவீன இயந்திரங்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. 
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் எந்த மாநிலங்களிலும் இல்லாத அளவுக்கு அரசின் ஆவணங்கள் அனைத்தும் அரசு அச்சகங்களில் அச்சிடப்படுகின்றன. சேலம் அரசு கிளை அச்சகம் 1966-இல் தொடங்கப்பட்டது.  
இதற்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.  முந்தைய ஆட்சியில் தனியார் அச்சகத்தில் அச்சிட்டு வருகிற நடைமுறையை, தற்போதைய அரசு மாற்றியுள்ளது   என்றார்.
ஆய்வின்போது சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ ஜி.வெங்கடாசலம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com