Enable Javscript for better performance
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருத்தப்பட்ட புதிய அட்டவணை வெளியீடு- Dinamani

சுடச்சுட

    

    பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: திருத்தப்பட்ட புதிய அட்டவணை வெளியீடு

    By DIN  |   Published on : 17th September 2019 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dpi

    பத்தாம் வகுப்பு மொழிப் பாடங்களுக்கு ஒரே தாளாக தேர்வு நடைபெறும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த வகுப்புக்கு பொதுத்தேர்வுக்கான திருத்தப்பட்ட கால அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

    தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு 2019-2020-ஆம் கல்வியாண்டுக்கான 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை, கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது.  அதன்படி, பத்தாம் வகுப்புக்கு மார்ச் 17-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்த நிலையில் மாணவர்களின் மன அழுத்தம், கால விரயத்தை குறைக்கும் வகையில் பத்தாம் வகுப்புக்கு மொழிப் பாடங்கள் இனி முதல் தாள், இரண்டாம் தாள் என நடத்தப்படாது. மாறாக மொழிப் பாடங்களுக்கான இரு தாள்களையும் ஒருங்கிணைத்து ஒரே தாளாக தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை கடந்த 13-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த நிலையில், பத்தாம் வகுப்புக்கான திருத்தப்பட்ட புதிய தேர்வு கால அட்டவணையை அரசுத்தேர்வுகள் இயக்குநர் சி.உஷாராணி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளார். அதன்படி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் 27 முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.


    திருத்தப்பட்ட  அட்டவணை


    27-03-2020  வெள்ளிக்கிழமை    மொழிப்பாடம்
    28-03-2020  சனிக்கிழமை    விருப்ப மொழிப்பாடம்
    31-03-2020  செவ்வாய்க்கிழமை    ஆங்கிலம்
    03-03-2020  வெள்ளிக்கிழமை    சமூக அறிவியல்
    07-03-2020  செவ்வாய்க்கிழமை    அறிவியல்
    13-04-2020  திங்கள்கிழமை    கணிதம்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai