இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு: மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங்

இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்த சென்னை சர்வதேச இளைஞர் திருவிழா நல்ல வாய்ப்பாக உள்ளது என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரகலாத் சிங்

இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்த சென்னை சர்வதேச இளைஞர் திருவிழா நல்ல வாய்ப்பாக உள்ளது என்று மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) பிரகலாத் சிங் தெரிவித்தார்.
இளைஞர் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில், சென்னை சர்வதேச இளைஞர் திருவிழா செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதன்  நிறைவு நிகழ்ச்சி, சென்னை, ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
இதில், இளைஞர் மேம்பாட்டு கூட்டமைப்பு தலைவர் அமர் பிரசாத் ரெட்டி தலைமை வகித்தார். 
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) பிரகலாத் சிங் படேல் பங்கேற்றார். 
விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அவர் விருது வழங்கி பேசியது: பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது, மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
அந்தத் திறமைகளை இதுபோன்ற மேடைகளில் வெளிப்படுத்தி தங்களை நிரூபிக்க முடியும்  என்றார் . 
மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே பேசியது: நாடு முழுவதும் மக்களின் அன்றாட வாழ்வில் உடல் இயக்க செயல்பாடுகள் மற்றும் விளையாட்டு குறித்து கற்பிக்கும் நோக்கில் "பிட் இந்தியா' இயக்கத்தை மத்திய அரசு தொடக்கியுள்ளது. வாழ்க்கை முறை கோளாறுகளால் வாழ்க்கை முறை நோய்கள் ஏற்படுகின்றன. வாழ்க்கை முறையில் மாற்றங்களை மேற்கொண்டால், இந்த  வாழ்க்கை முறை கோளாறுகளை சரிபடுத்த முடியும். இந்த மாற்றங்கள் தொடர்பான உத்வேகத்தை மக்களிடம் ஏற்படுத்தவே "பிட் இந்தியா' இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.  ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி நாட்டை எடுத்துச் செல்ல இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தில் தமிழகமும் பங்காற்றி வருகிறது. இதுபோல, மக்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டம் உள்பட  பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்றார் அவர்.
இளைஞர் மேம்பாட்டு கூட்டமைப்பின் சார்பில், 15 நாள்களாக நடைபெற்ற இந்தத் திருவிழாவில் 1, 700 இளைஞர்கள் பங்கேற்றனர். திருவிழாவில், 70 இடங்களில் 150 பிரிவுகளில் போட்டிகள்  நடைபெற்றன. 
இதில், விளையாட்டு, தற்காப்பு கலைகள், அறிவுசார் சொற்பொழிவு, சாகச நிகழ்ச்சிகள், இளம் கலைஞர்கள் முகாம், கலாசார நிகழ்ச்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் இடம்பெற்றன. இதில்,  திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்றவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com