கருக்கலைப்பு மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை: 52 மருந்தகங்கள் மீது நடவடிக்கை

கருக்கலைப்பு மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 52 மருந்தகங்களுக்கு எதிராக மாநில மருத்து தரக் கட்டுப்பாட்டு துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
கருக்கலைப்பு மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை: 52 மருந்தகங்கள் மீது நடவடிக்கை

கருக்கலைப்பு மருந்துகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 52 மருந்தகங்களுக்கு எதிராக மாநில மருத்து தரக் கட்டுப்பாட்டு துறை வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுபோன்ற விதிகளுக்குப் புறம்பான செயல்களைத் தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 39,500 மருந்தகங்கள் உள்ளன; அதேபோன்று நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்பாடுகளையும், வர்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்து கட்டுப்பாட்டு இயக்குநகரம் கண்காணித்து வருகிறது. குறிப்பாக, மருத்துவரின் பரிந்துரையின்றி சில மருந்துகள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்தும் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. 
அதுபோன்ற முறைகேடுகளோ, விதிமீறல்களோ கண்டறியப்பட்டால், உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. இந்நிலையில், சில மருந்தகங்களில் கருத்தடை மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.
ஏறத்தாழ நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் அத்தகைய சட்ட விரோத விற்பனை நடந்திருப்பதை மருந்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து, அதன்பேரில் விசாரணை நடத்தி முதல்கட்டமாக 52 மருத்து கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்ற மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர். 
இதுதொடர்பாக மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டுத்துறை இயக்குநர் கே.சிவபாலன் கூறியதாவது:
பொதுவாகவே, மருந்து கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்வது என்பது தவறான செயலாகும். அதிலும், சில முக்கிய மருந்துகளை அவ்வாறு விற்பனை செய்வது சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.கருக் கலைப்பு மருந்துகள் அதில் முக்கியமானவை. 
மருத்துவரின் பரிந்துரையின்றி அந்த மருந்துகளை விற்பனை செய்வது ஆபத்துக்குரிய விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறு மருத்துவரின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக அந்த மருந்தை உட்கொண்ட சில பெண்கள் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்திருக்கின்றன. எனவே, இதுபோன்ற விதிகளுக்குப் புறம்பான செயல்களைக் கட்டுப்படுத்தவே ஆய்வு நடவடிக்கைகளையும், வழக்குப் பதிவுகளையும் மேற்கொள்கிறோம் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com