உத்கிருஷ்ட் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் அடங்கிய   சென்னை - காரைக்கால் விரைவு  ரயிலின் முதல் சேவையை சென்னை எழும்பூரில் இருந்து தொடக்கி வைத்த  ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள்.
உத்கிருஷ்ட் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் அடங்கிய   சென்னை - காரைக்கால் விரைவு  ரயிலின் முதல் சேவையை சென்னை எழும்பூரில் இருந்து தொடக்கி வைத்த  ரயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள்.

உத்கிருஷ்ட் திட்டம்: காரைக்கால் விரைவு ரயிலில் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைப்பு

உத்கிருஷ்ட் திட்டத்தின் கீழ், சென்னை எழும்பூர்- காரைக்காலுக்கு இயக்கப்படும் காரைக்கால் விரைவு ரயிலில் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலின் முதல் சேவை


உத்கிருஷ்ட் திட்டத்தின் கீழ், சென்னை எழும்பூர்- காரைக்காலுக்கு இயக்கப்படும் காரைக்கால் விரைவு ரயிலில் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலின் முதல் சேவை திங்கள்கிழமை (செப்.16) தொடங்கியது.
உத்கிருஷ்ட் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் ரயில்களில் இணைக்கப்பட்டு வருகின்றன. தெற்கு ரயில்வேயில் இருந்து நாடு முழுவதும் இயக்கப்படும் 64 ரயில்களில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பெட்டிகளின் உள்கட்டமைப்பை தரம் உயர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு பெட்டியையும் ரூ.60 லட்சம் செலவில் புதுப்பிக்கவும் அனுமதி வழங்கியுள்ளது.   
 தெற்கு ரயில்வேயில் கடந்த ஜூலை மாதம் 6 ரயில்களில் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டன. ஆகஸ்ட் மாதத்தில், 5 ரயில்களில் தரம் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டன. 
சென்னை ரயில்வே கோட்டத்தில் சென்னை சென்ட்ரல்-ஜல்பைகுரிக்கு இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில், சென்னை எழும்பூர்-காரைக்காலுக்கு இயக்கப்படும் கம்பன் விரைவு ரயில் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டன. செப்டம்பர் மாதத்தில் காரைக்கால் விரைவு ரயிலில் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தரப்பில்  அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், சென்னை எழும்பூர்- காரைக்காலுக்கு இயக்கப்படும் காரைக்கால் விரைவு ரயிலில் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் தற்போது  இணைக்கப்பட்டுள்ளன. இரண்டாவது மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் அடங்கிய இந்த விரைவு ரயிலின் முதல் சேவை திங்கள்கிழமை (செப்.16) தொடங்கியது. பெரம்பூர் கேரஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், பொன்மலை பணிமனை ஆகிய இடங்களில் இந்த ரயிலுக்கான பெட்டிகள் மேம்படுத்தப்பட்டன. 
சிறப்பு அம்சங்கள்: இந்த ரயிலில் 23 மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 
இந்த ரயில் பெட்டிகளில் நவீன, துர்நாற்றம் இல்லாத வகையிலான கழிவறைகள், நீண்ட ஆயுள் கொண்ட வண்ணப்பூச்சு, நீர் தேங்கி நிற்காத வகையில் சாய்வு தரை அமைப்பு இடம்பெற்றுள்ளது. 
மேலும், முன்பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பெட்டிகளிலும் இருபுறமும் செல்லிடப்பேசி மின்னேற்றம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. 
பயணிகளின் பாதுகாப்புக்காக தீயணைப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அதோடு, புதிய தோற்றத்துடன் கூடிய இருக்கைகள் என்று பல்வேறு மேம்பாடுகள் இந்த ரயில் பெட்டிகளில் செய்யப்பட்டுள்ளன. 
 சென்னை-காரைக்காலுக்கு இயக்கப்படும் கம்பன் விரைவு ரயிலில் மேம்படுத்த பெட்டிகள் கடந்த மாதம் சேர்க்கப்பட்டிருந்தது. 
இதைத் தொடர்ந்து, சென்னையில் இருந்து காரைக்காலுக்கு செல்லும்  விரைவு ரயிலில் இரண்டாவது மேம்படுத்தப்பட்ட பெட்டிகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com