தமிழகத்துக்கு இந்த வாரம் முழுக்க அமோகமாக இருக்கும்: சொல்வது தமிழ்நாடு வெதர்மேன்

தமிழகத்தில் கடந்த புதன்கிழமை பரவலாக மழை வெளுத்து வாங்கியது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே போல இந்த வாரம் முழுக்க தமிழகத்தில் மழை வாய்ப்பு அமோகமாக இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு இந்த வாரம் முழுக்க அமோகமாக இருக்கும்: சொல்வது தமிழ்நாடு வெதர்மேன்


சென்னை: தமிழகத்தில் கடந்த புதன்கிழமை பரவலாக மழை வெளுத்து வாங்கியது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதே போல இந்த வாரம் முழுக்க தமிழகத்தில் மழை வாய்ப்பு அமோகமாக இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், தற்போது தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் அனைத்து நாட்களும் மழை பெய்யும் மாதமாக இது அமைந்துள்ளது.

இந்த திருவிழாவில் மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்கள் சேருமா அல்லது வெளியேறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

உள் மாவட்டங்களான தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், மற்றும் கடற்கரையோர மாவட்டங்களான கடலூர், புதுச்சேரி ஆகியவை மழைக்கு சரியான இலக்காக உள்ளன.

காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை
கடந்த வாரம் எல்லாம் மேக மூட்டமாக இருப்பதும், ஆனால் மழை பெய்யாமல் விஜயகாந்த் வாழைப்பழத் தோலைத் தூக்கி வேறு எங்கோ எறிவது போல வேறு ஒரு இடத்தில் மழை பெய்வதுமாக இருந்தது.

ஆனால் ஒரு வழியாக சென்னையில் கன மழை என்று தலைப்பு வைக்கும் வகையில் பெய்த மழை வேற லெவல். ஆனால் மீண்டும் நமக்கு போன வாரம் ஏற்பட்ட அதே பொறுமை தேவைப்படுகிறது. அதாவது சென்னைக்கு செப்டம்பர் மாதத்தில் பெய்ய வேண்டிய ஒட்டுமொத்த மழையின் அளவு 147 மி.மீ. வட சென்னையில் ஏற்கனவே ஒரே நாளில் இந்த மழை அளவு கிடைத்துவிட்டது.

கவனிக்க வேண்டிய முக்கியமான சில நாட்கள்
சனிக்கிழமை முதல் புதன்கிழமை (செப்டம்பர் 21 முதல் 25ம் தேதி) வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மாவட்டங்கள் கவனிக்கப்பட வேண்டிய நாட்களாகும். இந்த மாவட்டங்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் கவனிக்கப்பட வேண்டிய நாட்களும் இதுவே என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், 21ம் தேதி இரவு காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மவாட்டங்களில் மழைக்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது. அதே போல, டெல்டா, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்பு பலமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com