உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் ரூ.1,608 கோடி விடுவிப்பு: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை மானியத் தொகையான ரூ.1608.03 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக ரூ.9.18 கோடி மதிப்பீட்டில் நாப்கின்கள் கொள்முதல் செய்வதற்கான பணி ஆணையை சென்னையில் வியாழக்கிழமை வழங்கிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக ரூ.9.18 கோடி மதிப்பீட்டில் நாப்கின்கள் கொள்முதல் செய்வதற்கான பணி ஆணையை சென்னையில் வியாழக்கிழமை வழங்கிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, 


தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை மானியத் தொகையான ரூ.1608.03 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளதாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் ரூ.9.18 கோடி மதிப்பில்  நாப்கின்கள் கொள்முதலுக்கான பணி ஆணை மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட  91 ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கும் விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:  
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை, செயல்பாடு மானியமாக ரூ. 4,977.18 கோடியை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, அடிப்படை மானியத்தின்கீழ் 2018-19-ஆம் ஆண்டின் 2-ஆம் தவணைத் தொகையாக மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு  ரூ. 731.90 கோடி, ஊராட்சிகளுக்கு ரூ. 876.94 கோடி என மொத்தம் ரூ. 1608.03 கோடியை, புதன்கிழமை விடுவித்துள்ளது.
இதன்படி, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2015-16-ஆம் ஆண்டு முதல் 2019-20 வரையிலான காலகட்டத்தில்  தவணைத் தொகையான ரூ.12,312 கோடியே 74 லட்சத்தில், இதுவரை ரூ. 8,531 கோடியே 94 லட்சத்தை அடிப்படை மானியமாக மத்திய அரசு விடுவித்துள்ளது.
2019-20-ஆம் ஆண்டுக்கான அடிப்படை மானியத்தின் முதல் தவணைத் தொகை ரூ.2,172.78 கோடி, 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளுக்கான செயலாக்க மானியமாக ரூ.1,196.27 கோடி என மொத்தம் ரூ.3,369.05 கோடி நடப்பு நிதியாண்டு தவணைத் தொகையாக விடுவிக்கப்பட வேண்டி உள்ளது. இந்தத் தொகையை விடுவிக்க மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள்: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மாதத்துக்கு 3 லட்சம் நாப்கின் பாக்கெட்டுகள் வழங்கத் திட்டமிடப்பட்டு, இப்பணியை மேற்கொள்ளும் பொறுப்பு, தமிழ்நாடு சானிடரி நாப்கின் உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டது. இதுவரை 46 மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் ரூ.4.40 கோடி மதிப்பிலான 30 லட்சம் நாப்கின் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு, மாவட்ட சுகாதார மையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. மகளிர் சுய உதவிக் குழுவினரின் பணியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனம் 2019-20-ஆம் ஆண்டுக்கான கொள்முதல் ஆணையை, ரூ. 36 லட்சத்திலிருந்து ரூ. 43.75 லட்சமாக உயர்த்தி உள்ளது.
உழைக்கும் பெண்களுக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின்கீழ், 2017-18 மற்றும் 2018-19 ஆம் ஆண்டுகளில் தலா ரூ.252 கோடி  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதுவரை 1லட்சத்து 95 ஆயிரத்து 875 பேர் பயனடைந்துள்ளனர் என்று அமைச்சர் வேலுமணி கூறினார்.  இந்த நிகழ்ச்சியில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com