இடைத்தேர்தலில் போட்டியில்லை; காரணம் இதுதான்: டிடிவி தினகரன்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடாது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் காலியாகவுள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் நாளை மற்றும் திங்கள்கிழமை விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் திங்கள்கிழமை நேர்காணல் நடைபெறும் என்றும் அதிமுக அறிவித்துள்ளது. 

திமுக கூட்டணி சார்பில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் போட்டியிடுகின்றன. 

இந்நிலையில், டிடிவி தினகரன் பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "சின்னம் பெற்ற பிறகுதான் தேர்தலில் போட்டியிட முடியும். அதனால் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லை" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com