திருநள்ளாறு கோயிலில் ரூ.50 லட்சத்தில் கருங்கல் தளம் அமைக்கும் பணி தொடக்கம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தரை தளத்தில் கருங்கல் தளம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருநள்ளாறு கோயிலில் கருங்கல் தளம் அமைக்கும் பணியை தொடக்கி வைத்த ஆட்சியர் த. விக்ரந்த் ராஜா உள்ளிட்டோர். 
திருநள்ளாறு கோயிலில் கருங்கல் தளம் அமைக்கும் பணியை தொடக்கி வைத்த ஆட்சியர் த. விக்ரந்த் ராஜா உள்ளிட்டோர். 


திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் தரை தளத்தில் கருங்கல் தளம் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா நிகழாண்டு தொடக்கத்தில் நடைபெற்றது. கோயில் உள்புறத்தில் சில இடங்களில் கருங்கல் தளமாகவும், சில பகுதிகள் சிமென்ட் தளமாகவும் இருந்தது. இந்நிலையில், அனைத்து பகுதிகளிலும் கருங்கல் பதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்து, சில இடங்களில் கருங்கல் பதிக்கும் பணியை மேற்கொண்டது. பின்னர், குடமுழுக்கு விழா நடத்தி முடிக்கப்பட்டது.
தற்போது, பெங்களூருவை சேர்ந்த பக்தர், திருநள்ளாறு கோயில் பிராகாரத்தில் கருங்கல் பதிக்கும் செலவை ஏற்று, ரூ. 50 லட்சம் செலவில் கருங்கல் பலகைகளை அனுப்பியுள்ளார். ராஜகோபுர வாயிலில் இருந்து இறங்கியவுடன் தொடங்கும் வகையிலான 3-ஆவது பிராகாரத்தில் கருங்கல் தளம் அமைக்கும் அமைக்கும் பணிக்கான பூஜை வெள்ளிக்கிழமை கோயில் வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான ஏ. விக்ரந்த் ராஜா கலந்துகொண்டு பணியை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், நிர்வாக அதிகாரி (கோயில்கள்) எஸ். சுபாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பிராகாரத்தில் கருங்கல் பதிப்பதற்கேற்ப 11 ஆயிரம் சதுர அடி கற்பலகைகள்  கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த பணிகள் ஒரு மாத காலத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com