விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 21-இல் நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

விக்கிரவாண்டி, நான்குனேரி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 21-இல் நடைபெறுகிறது.

இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகள் முறையே திருநெல்வேலி மற்றும் விழுப்புரம் மாவட்டத்துக்குள் வருகின்றன. இதையடுத்து இந்த இரு மாவட்டங்களுக்கும் தேர்தல் நடத்தை நெறிமுறைகள் உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளன.
விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட

முடிவு செய்துள்ளது. நான்குனேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் போட்டியிடும் என அக்கட்சிகளின் தலைமைகள் அறிவித்துள்ளன.

அதிமுக, திமுக கட்சிகளின் சார்பில் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் ஓரிரு நாள்களில் அறிவிக்கப்பட உள்ளன. இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என  டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடைத் தேர்தல் குறித்த தங்களது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்கும் எனத் தெரிகிறது.

இந்த இரு தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (செப்.23) தொடங்குகிறது.  வேட்புமனு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி நாள். வாக்குப் பதிவு அக்டோபர் 21-இல் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com