நீர், காற்றாலை மூலம்  3,000 மெகாவாட் மின் உற்பத்தி

நீர், காற்றாலை மூலம் 3,000 மெகாவாட்டுக்கு அதிகமான மின் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீர், காற்றாலை மூலம்  3,000 மெகாவாட் மின் உற்பத்தி

நீர், காற்றாலை மூலம் 3,000 மெகாவாட்டுக்கு அதிகமான மின் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் மின் உற்பத்தி மற்றும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான மின்சாரத்தை அனல், நீர், காற்று, சூரிய சக்தி மூலம் தயார் செய்யப்படுகிறது. தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றின் வேகமும், அணைகளுக்கு வரும் நீர்வரத்தும் தொடர்ந்து சீராக  உள்ளது. எனவே, இவற்றின் மூலம் உற்பத்தி செய்யும் மின்சாரத்தின்அளவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் மெகாவாட்டுக்கு மேல் மின் உற்பத்தி செய்யும் நீர் மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பரவலாக மழை பெய்து வருவதால், இந்த மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கிறது. தற்போதுள்ள நிலவரப்படி, நீர் மின் நிலையங்களில் 1,500 மெகாவாட்டுக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதே போல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோயம்புத்தூர், தேனி போன்ற மாவட்டங்களில் அதிகளவிலான காற்றாலைகள் அமைக்கப்பட்டு மின்சார உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தப் பகுதிகளிலும் தற்போது 1,592 மெகாவாட்டுக்கும் அதிகமான அளவு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தொடர்ந்து சில நாள்களுக்கு மேலும் காற்றும், மழையும் அதிகமாக வாய்ப்பிருப்பதால் மின் உற்பத்தியின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com