தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும்? சர்ச்சைக்கு திரி கிள்ளிய ராதாரவி 

தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும்? என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராதாரவி பேசியுள்ளது புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
நடிகர் ராதாரவி
நடிகர் ராதாரவி

சென்னை: தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும்? என்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ராதாரவி பேசியுள்ளது புதிய சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.

மறைந்த நடிகர் 'நடிகவேள்' எம்.ஆர்.ராதாவின் 40-வது ஆண்டு புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவரது மகனும் பிரபல நடிகருமான ராதாரவி கலந்துகொண்டார். அங்கு பேசும்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தின் வளர்ச்சிக்கு தெலுங்கர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தெலுங்கர்கள் மட்டும் இல்லை என்றால், தமிழ்நாடு எப்படி வளர்ந்திருக்கும்? நான் தெலுங்கர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் இப்போது பாதிக்கும் மேல் தெலுங்கர்களே உள்ளனர். குறிப்பாக திராவிட இயக்க வளர்சிக்காக தனது நடிப்பின் மூலம் பாடுபட்ட எனது தந்தை எம்.ஆர்.ராதாவை, அந்த இயக்கங்கள் மறந்துவிட்டன. இருந்தபோதிலும் இப்போதும் எனது இனத்தை சேர்ந்த தெலுங்கர்கள் தான் அவரை நினைவுகூர்ந்து விழாக்கள் எடுத்து வருகின்றனர்.

அவரது இந்த பேச்சு சினிமா வட்டாரங்களிலும், அவர் சார்ந்துள்ள அதிமுக கட்சி வட்டாரத்திலும் சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. 

ராதாரவியின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்றும், அதற்கும் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com