கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டமயமானது: மு.க. ஸ்டாலின்

கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டமயமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 
கருணாநிதி சிலையை திறந்துவைத்து மரியாதை செலுத்துகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 
கருணாநிதி சிலையை திறந்துவைத்து மரியாதை செலுத்துகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். 

கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டமயமானது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். 
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. சிலையைத் திறந்துவைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 
பேசியதாவது:
ஒரு போராட்டத்துக்கிடையே கருணாநிதியின் சிலை இங்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  கருணாநிதியின் வாழ்க்கையே போராட்டம்தான். மொழிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் வாடியவர்.
நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது கருணாநிதி முதல்வராக இருந்தார். அப்போது இந்திரா காந்தியின் தூதராக இருவர் வந்து கருணாநிதியைச் சந்தித்தனர். நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் எதிர்க்கக் கூடாது என்று தெரிவித்தனர். அப்படி எதிர்த்தால் உங்கள் ஆட்சி உடனடியாகக் கவிழ்க்கப்படும். 
எதிர்க்காமல் இருந்தால் ஆட்சி நீடிக்கும் என அவர்கள் சொன்னபோது, எங்கள் உரிமையைக் காக்க ஆட்சியை அல்ல, எங்கள் உயிரையும் கொடுக்கத் தயாராக உள்ளேன் எனக் கூறி நெருக்கடி நிலையை 
கருணாநிதி எதிர்த்தார். 
வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது அவர் மறைந்த பிறகும் மெரீனா கடற்கரையில் அண்ணாவுக்குப் பக்கத்தில் ஆறு அடி நிலத்தைப் போராடித்தான் பெற்றார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து, வள்ளுவருக்கு சிலை, வள்ளுவர் கோட்டம் என தமிழுக்குப் பெருமை சேர்த்த கருணாநிதிக்கு இந்த அரசு ஆறு அடி நிலம் தர மறுத்தபோது நீதிமன்றம் சென்று வெற்றி பெற்றோம். இப்படி அவரது வாழ்க்கையே போராட்டமாக இருந்துள்ளது. 
 ஈரோட்டில் இன்று கருணாநிதிக்கு இரண்டாவது சிலை அமைக்கப்பட்டதுபோல தமிழகம் முழுவதும் அரசின் அனுமதியோடு கருணாநிதியின் சிலை திறக்கப்படும். இந்த சிலை வைக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தபோது, தீர்ப்பு வரும் முன்பே ஆட்சியாளர்கள் அனுமதி தந்துள்ளது நமக்குக் கிடைத்த வெற்றி என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com