என்.ஐ.ஆர்.எப். தரவரிசை: விண்ணப்பிக்க செப்.30 கடைசி

தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவன (என்.ஐ.ஆர்.எப்.) தரவரிசை நடைமுறைக்கு உயர் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாளாகும்.


தேசிய அளவிலான உயர்கல்வி நிறுவன (என்.ஐ.ஆர்.எப்.) தரவரிசை நடைமுறைக்கு உயர் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாளாகும்.
இந்திய உயர் கல்வி நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, உலகத் தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களாக உயர்த்தும் நோக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு என்.ஐ.ஆர்.எப். ரேங்கிங் நடைமுறையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிமுகம் செய்தது. 2016-ஆம் ஆண்டு முதல் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்த தரவரிசை நடைமுறையில் நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் பங்கேற்க வைக்கும் வகையில், புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றின் சார்பில் வழங்கப்பட்டு வரும் வளர்ச்சி நிதி உள்ளிட்ட அனைத்து வகையான நிதி உதவிகளையும் இந்த என்.ஐ.ஆர்.எப். தரவரிசையின் அடிப்படையிலேயே வழங்குவது என்பதுதான் அந்தத் திட்டம்.
இதன் காரணமாக, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களும் இந்த நடைமுறையில் பங்கேற்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. 
இப்போது 2020-ஆம் ஆண்டுக்கான தரவரிசை நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு உயர் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாளாகும். இதுகுறித்த விவரங்களை www.nirfindia.org என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com