வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழன், வெள்ளிக்கிழமை (செப். 26,27) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவிருந்த வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தப்
வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு


வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழன், வெள்ளிக்கிழமை (செப். 26,27) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவிருந்த வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலர் ஆர்.சேகரன் கூறியது: 
வங்கிகள் இணைப்பு நடவடிக்கையை மத்திய அரசு  உடனடியாகக் கைவிட வேண்டும். ஊதிய ஒப்பந்தம் காலாவதியாகி 23 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழன், வெள்ளிக்கிழமை (செப். 26, 27) ஆகிய இரண்டு நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக, வங்கி அதிகாரிகள் சங்க நிர்வாகிகளுடன் மத்திய நிதித்துறை செயலர் ராஜீவ் குமார் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், வங்கி இணைப்பு நடவடிக்கை தொடர்பாக குழு அமைக்கப்பட்டு, ஆலோசிக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதுடன், மற்ற கோரிக்கைகள் தொடர்பாக  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையேற்று கொண்டு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com