விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

தமிழகம், புதுச்சேரியில் நடைபெறவுள்ள இடைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.

விக்கிரவாண்டி,  நான்குனேரி, புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. விருப்ப மனுக்கள் அளித்தோரிடம் நேர்காணல்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்த அறிவிப்பு புதன்கிழமை காலை வெளியிடப்பட்டது. 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக எம்.முத்தமிழ்ச்செல்வன் மற்றும் நான்குனேரி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளராக ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் அறிவிக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com