நகைக்காக பெண்ணைக் கொன்று சூட்கேசில் அடைத்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

2013ம் ஆண்டில் கோவையில் நகைக்காக பெண்ணைக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த குற்றவாளிக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.
நகைக்காக பெண்ணைக் கொன்று சூட்கேசில் அடைத்த குற்றவாளிக்கு தூக்கு தண்டனை


கோவை: 2013ம் ஆண்டில் கோவையில் நகைக்காக பெண்ணைக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த குற்றவாளிக்கு கோவை மாவட்ட நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது.

குற்றவாளி யாசர் அராஃபத்துக்கு தூக்கு தண்டனையுடன், 7 ஆண்டு சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதித்து 4வது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோவையில் 2013ம் ஆண்டு நகைக்காக சரோஜினி என்ற பெண்ணைக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் அடைத்த வழக்கில், நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த யாசர் அராஃபத்துக்கு கோவை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

பெண்ணைக் கொலை செய்து தப்பியோடிய யாசர் அராஃபத்தை விசாகப்பட்டினத்தில் காவல்துறை தனிப்படையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com