தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்! தமிழக அரசுக்கு வேல்முருகன் கண்டனம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 2 தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 2 தேர்வில் மொழித்தாள் நீக்கம்! தமிழக அரசுக்கு வேல்முருகன் கண்டனம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 2 தேர்வில் மொழித்தாள் நீக்கம் செய்யப்பட்டதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
வந்தேறிக் கும்பல் துணைக்கண்டத்திற்குள் புகுந்த ஈராயிரம் ஆண்டுகளிலிருந்தே செய்துவருகின்றது தமிழுக்கு, தமிழர்க்கு எதிரான சதிச் செயல்களை! புழுத்து நாறும் செத்த சவமான சனாதனத்தை இன்னும் புதைக்காதது ஏன் எனத் தமிழினம் தொடர்ந்து கேள்வி எழுப்புவதே காரணம். இப்போது ஆர்எஸ்எஸ்-பாஜக அதிகாரத்திலிருப்பதால் அந்தச் சதிச் செயல்கள் நாள்தோறும் காதில் விழுகின்றன. ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாச்சாரம், ஒரே ரேஷன் கார்டு, ஒரே மொழி அது இந்தி மொழி... இப்படியாக!
அதோடு 5ஆம் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்று பிஞ்சிலேயே பிள்ளைகளை வடிகட்டி இடைநிற்றலை ஊக்குவித்து கல்வியை மறுக்கின்ற கயமைச் செயல்! தமிழகத்திலுள்ள ஒன்றிய அரசுப் பணிகள் மற்றும் ஒன்றிய நிறுவனப் பணிகளில் இந்தி பேசுவோரை நுழைத்து தமிழர்களைப் புறந்தள்ளுதல்! தமிழ்நாடு அரசுப் பணிகளிலும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவரும் சேரும்படி விதிகளை வளைத்தல்! இப்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 தேர்விலேயே கைவைத்துவிட்டார்கள்.
இது அதிகாரிகள் மற்றும் முக்கியப் பதவிகளுக்கான தேர்வாகும். டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வின் பாடத்திட்டத்தை மாற்றுவதாகச் சொல்லி அதில் இருந்துவந்த மொழித்தாளை நீக்கிவிட்டார்கள்.  நேர்காணல் அல்லாத பணியிடங்களுக்கான பாடத்திட்டம் சார்ந்தது இந்த மொழித்தாள் ஆகும். ஏன் இதை மாற்றினார்கள் என்பது தெரியாததல்ல. வெளி மாநிலத்தவர், குறிப்பாக இந்தி பேசுவோரை தமிழ்நாடு அரசின் உயர் பதவிகளுக்குக் கொண்டுவருவது; அதன்மூலம் தமிழர்களுக்கு வேலை கிடைக்காமல் செய்து அவர்களை நிர்கதியில் தள்ளுவது.
மொழித்தாள் என்பது தமிழிலும் உண்டு, ஆங்கிலத்திலும் உண்டு. தமிழர்கள் இருமொழிக் கொள்கையில் கல்வி கற்பவர்கள்; அதாவது தமிழிலும் ஆங்கிலத்திலும். எனவே இரு மொழிகளிலும் சாதிப்பர். ஆனால் ஆங்கிலம் படித்திருந்தும் வடபுலத்தவர் அந்த ஆங்கிலத்தில் கூட அவ்வளவாகத் தேர்ச்சியில்லாதவர்கள்; தங்களின் தாய்மொழி தவிர வேறு மொழிக்குப் பழக்கமில்லாதவர்கள்; காரணம் அவர்களின் பாடத்திட்டமும் கற்றல் திறனும் அப்படித்தான். அதனாலேயே மொழித்தாளே வேண்டாம் என்று தூக்கிவிட்டார்கள்.
முதல் நிலைத் தேர்வில் இருந்த இந்த மொழித்தாளை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக “பொது அறிவு வினாக்கள்” என்று அறிவித்திருக்கிறார்கள். இதில் தமிழக அரசியல் வரலாறு மற்றும் தமிழகப் பாரம்பரியப் பகுதிகள் இடம்பெறும். இந்த மாற்றத்தின்படி, ஒரு தேர்வாக இருந்த “குரூப் 2 ஏ தேர்வு” இனி “இரு தேர்வு முறை” ஆக்கப்படுகிறது. குரூப் 1 தேர்வு போன்று, “முதல் நிலைத் தேர்வு” மற்றும் “முதன்மை தேர்வு”.
ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு அடிபணிந்துதான் அதிமுக அரசு தமிழர்க்கு எதிரான இந்தச் சதிச்செயலைச் செய்துள்ளது. அழுகிப் புரையோடிய மனுவாத சவத்தை அருவருப்பவன் தமிழன் என்பது தெரிந்தும் இந்த அடாத செயலைச் செய்துள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உடனடியாக இதனைத் திரும்பப்பெறக் கோருகிறது! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com