வழிதவறி ஊருக்குள் புகுந்த யானைக் குட்டி: தாயிடம் சேர்த்த வனத் துறையினர்

வழிதவறி ஊருக்குள் புகுந்த யானைக் குட்டி: தாயிடம் சேர்த்த வனத் துறையினர்

கடம்பூர் அருகே பவளக்குட்டை வனத்தில் இருந்து வழிதவறி ஊருக்குள் புகுந்த யானைக் குட்டியை மீட்டு தாயிடம் வனத் துறையினர் வெள்ளிக்கிழமை  சேர்த்தனர். 

கடம்பூர் அருகே பவளக்குட்டை வனத்தில் இருந்து வழிதவறி ஊருக்குள் புகுந்த யானைக் குட்டியை மீட்டு தாயிடம் வனத் துறையினர் வெள்ளிக்கிழமை சேர்த்தனர். 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் வனப் பகுதியை ஒட்டி பவளக்குட்டை கிராமம் உள்ளது. வனத்தையொட்டிய பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். வனத்தில் இருந்து வரும் யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாயப் பயிர்களைச் சேதம் செய்துவந்தன.

இந்நிலையில், வனத்தில் இருந்து வழிதவறி வந்த 2 மாத ஆண் யானைக் குட்டி பவளக்குட்டை  முருகன்கரடு மக்காச்சோளம் காட்டில் சுற்றித் திரிந்தது. இதைப் பார்த்த கிராம மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத் துறையினர் குட்டியை மீட்டு அதற்கு திரவப் பொருள்களை வழங்கினர். வெயில் அதிகமாக இருந்ததால் குட்டிக்கு தண்ணீர் ஊற்றி வெப்பத்தை தணித்தனர். அதைத் தொடர்ந்து, யானைக் குட்டியை மெல்ல மெல்ல துரத்தியபடி சுமார் 2 மணி நேரத்துக்குப் பிறகு வனப் பகுதிக்குள் விரட்டி தாய் யானையுடன் சேர்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com