கீழடியில் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும்: அமைச்சர் க. பாண்டியராஜன்

சிவகங்கை மாவட்டம்,  கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும் என தமிழக தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்தார்.
கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணியை  வெள்ளிக்கிழமை பார்வையிட்ட அமைச்சர் க.பாண்டியராஜன். உடன் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணியை  வெள்ளிக்கிழமை பார்வையிட்ட அமைச்சர் க.பாண்டியராஜன். உடன் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்டம்,  கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும் என தமிழக தொல்லியல் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்தார்.

கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வுப் பணியை வெள்ளிக்கிழமை பார்வையிட்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறியது : கீழடியில் நடைபெற்று வரும் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களில் நிறைவு பெறும். இதில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல் பொருள்கள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே, இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி  துறையினர் மேற்கொண்ட 3 கட்ட அகழாய்வுப் பணிகளில், முதல் 2 கட்ட அகழாய்வுப் பணிகளின் இடைக்கால ஆய்வறிக்கை பெறப்பட்டுள்ளன. முழுமையான ஆய்வறிக்கை இன்னும் ஓரிரு மாதங்களில் கிடைக்கும்.

இந்நிலையில், நவீன தொழில்நுட்ப உதவிகளுடன் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் ஆகிய 4 பகுதிகளை உள்ளடக்கி 6- ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற உள்ளன. இதில், இந்திய தொல் பொருள் அகழ்வாராய்ச்சி துறை மற்றும் பல்வேறு பல்கலைக் கழகங்களுடன் இணைந்து செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர, தாமிரவருணி ஆற்றின் கரையோரங்கள், கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஏற்கெனவே அறிவித்தபடி கீழடியில் ரூ.1 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். இதுதவிர, அதே பகுதியில் ரூ.15 கோடியில் நவீன அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

இந்திய தொல்பொருள் அகழ்வாராய்ச்சி துறை சார்பில் 70 அகழாய்வுப் பணிகளும், தமிழக தொல்லியல் துறை சார்பில் 40 அகழாய்வுப் பணிகளும் நடைபெற்றுள்ளன. இதையடுத்து, 110 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு முடிவுகளை தொகுத்து முழுமையான தமிழர் வரலாற்றை வெளியிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். மைசூரில் உள்ள 38 ஆயிரம் கல்வெட்டுகளை தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் தமிழக தொல்லியல் துறையிடம் உள்ள 25 ஆயிரம் கல்வெட்டுகளும் முறையாக படியெடுக்கப்பட்டு பாதுகாக்கப்படும். தமிழக தொல்லியல் துறையில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். கீழடி மட்டுமின்றி தொல்லியல் சின்னங்கள் பாதுகாக்கப்படும் இடங்களில் வழிகாட்டி (கைடு) பணியிடம் உருவாக்கப்படும் என்றார்.  

இதில், தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.நாகராஜன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், மக்களவை முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன், தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம், திருப்புவனம் வட்டாட்சியர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பின்னர், கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். அந்த இடம் போக்குவரத்து மற்றும் மக்கள் வந்து செல்ல வசதிகள் இல்லாததால் மாற்று இடத்தைத் தேர்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com