Enable Javscript for better performance
அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு சாதனை படைத்து வருகிறது: முதல்வர் பழனிசாமி- Dinamani

சுடச்சுட

    

    அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு சாதனை படைத்து வருகிறது: முதல்வர் பழனிசாமி

    By DIN  |   Published on : 29th September 2019 01:27 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    EPS in salem mettur project

     

    சேலம் மேட்டூரில் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுவர் பூங்காவை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். இதையடுத்து மேச்சேரியில் அமமுகவைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டோர் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

    பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:

    மக்களின் பிரச்னைகளுக்கு விரைவாக தீர்வு காணும் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் மக்களிடம் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கணினி வழியில் பதிவு செய்யப்பட்டு முறைப்படுத்தப்படும். 

    காவிரி உபரி நீரை சேமிக்க மேட்டூரில் இருந்து கொள்ளிடம் வரை 4 புதிய தடுப்பணைகள் கட்டப்படும். எதிர்கட்சியினரின் பொய் பிரசாரங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் அதிமுக அரசு சாதனை படைத்து வருகிறது.

    தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் போதுமான அளவு தண்ணீர் அளிப்பதுதான் அரசின் முதல் கடமை என்று தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai