Enable Javscript for better performance
இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்: மு.க.ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்: மு.க.ஸ்டாலின்

    By DIN  |   Published on : 29th September 2019 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    stalin wishes manmohan singh

    திமுக தலைவர்  ஸ்டாலின்

    விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அண்ணா அறிவாலயத்துக்கு சனிக்கிழமை வந்தார். 
    அவருடன் நான்குனேரி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோரும் வந்தனர். மு.க.ஸ்டாலினைச் சந்தித்து ரூபி மனோகரன் வாழ்த்துப் பெற்றார். 
    அதைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
    பின்னர் செய்தியாளர்களிடம் ஸ்டாலின் கூறியது:
    காங்கிரஸ் நிர்வாகிகளுடன் தேர்தல் அணுகுமுறை குறித்து ஆலோசித்தோம். நான்குனேரி தொகுதியில் கடந்த சட்டப் பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ரூபி மனோகரன் வெற்றிபெறுவார். 
    நான்குனேரியில் அக்டோபர் 9,10, 15, 16-ஆம் தேதிகளில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளேன். அதிமுக அரசின் ஊழலையும் மத்திய அரசின் சர்வாதிகாரத்தையும் மக்களிடம் எடுத்து வைத்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai