Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாமக கூட்டணி தொடரும்: அன்புமணி ராமதாஸ்- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாமக கூட்டணி தொடரும்: அன்புமணி ராமதாஸ்

    By DIN  |   Published on : 29th September 2019 04:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    anbumani on railway jobs to locals

    பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

    நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவளிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாமக கூட்டணி தொடரும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 

    மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளருக்கு பாமக முழு ஆதரவளிக்கிறது. இரு தொகுதிகளிலும் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும். அதேபோல், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாமக கூட்டணி தொடரும். ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கக் கூடாது. 

    கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் கலாசாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய-மாநில அரசுகள் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைத்து, தமிழரின் கலாசாரம், பண்பாட்டை உலகறியச் செய்யவேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai