Enable Javscript for better performance
நீட் ஆள்மாறாட்ட வழக்கு: 3 தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்- Dinamani

சுடச்சுட

    

    நீட் ஆள்மாறாட்ட வழக்கு: 3 தனியார் மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு சம்மன்

    By DIN  |   Published on : 29th September 2019 01:13 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    neet

     

    நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு வழக்கில் ராகுல், பிரவீன், அபிராமி ஆகிய மேலும் 3 மாணவர்கள் உள்பட 5 பேரை சிபிசிஐடி போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    இதையடுத்து, நீட் ஆள்மாறாட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த தர்மபுரி மாணவர் இர்ஃபானை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் வெளிநாடு தப்பிச் சென்றாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக சிபிசிஐடி எஸ்.பி.விஜயகுமார் தெரிவித்தார்.

    இந்நிலையில், நீட் ஆள்மாறாட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 3 தனியார் மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 3 பேரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சிபிசிஐடி போலீஸார் அறிவுறுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai