வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் நாளையுடன் நிறைவடைகிறது

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் திங்கள்கிழமையுடன் (செப். 30) நிறைவடைகிறது. இந்த சரிபார்ப்பு  திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, வரும் 15-ஆம்

கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் திங்கள்கிழமையுடன் (செப். 30) நிறைவடைகிறது. இந்த சரிபார்ப்பு திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, வரும் 15-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இந்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு பிரத்யேக நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை வாக்காளர்களே சரிபார்க்கவும், தவறாக இருந்தால் அதனை இணையதளம், செயலி வழியாக திருத்திக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

12 லட்சம் பேர் திருத்தம்: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு திட்டத்தில், 12 லட்சத்து 11 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 1.40 லட்சம் பேர் திருத்தங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். வாக்காளர் விவரங்களை சரிபார்த்த பிறகு அதற்குரிய சான்றானது வாக்காளர்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் அனுப்பி வைக்கப்படும்.

கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த வாக்காளர் சரிபார்ப்புத் திட்டமானது, திங்கள்கிழமை (செப். 30) நிறைவடைகிறது. இதன்பின்பு, திருத்தங்களுக்காக செய்யப்பட்ட மனுக்கள் மீது ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆய்வின் அடிப்படையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகளுக்காக அளிக்கப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்படும்.

வரைவு வாக்காளர் பட்டியல்: வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புத் திட்டம் நிறைவடையவுள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை வரும் 15-ஆம் தேதி வெளியிட தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழகத்திலும் இதே காலகட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. 

மேலும், வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நான்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களை நடத்தவும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு வரும் ஜனவரி முதல் வாரத்தில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 

இதற்கு முன்பாக, உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டால், வரைவு வாக்காளர் பட்டியலே தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com