உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாமக கூட்டணி தொடரும்: அன்புமணி ராமதாஸ்

நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவளிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாமக கூட்டணி தொடரும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்

நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பாமக ஆதரவளிக்கிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாமக கூட்டணி தொடரும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் சனிக்கிழமை கூறியது: இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளருக்கு பாமக முழு ஆதரவளிக்கிறது. இரு தொகுதிகளிலும் அதிமுக நிச்சயம் வெற்றிபெறும். அதேபோல், உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக - பாமக கூட்டணி தொடரும். ஏழை, எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கக் கூடாது. 

கீழடியில் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் கலாசாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு, மத்திய-மாநில அரசுகள் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைத்து, தமிழரின் கலாசாரம், பண்பாட்டை உலகறியச் செய்யவேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com