கீழடியில் அகழாய்வை மேலும் விரிவுப்படுத்த வேண்டும்: ஹெச். ராஜா பேட்டி

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வை மேலும் விரிவுப்படுத்தவேண்டும் என்பதே பாஜகவின் வேண்டுகோள் என்று, அக்கட்சியின் தேசிய செயலா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.
கீழடியில் அகழாய்வை மேலும் விரிவுப்படுத்த வேண்டும்: ஹெச். ராஜா பேட்டி

கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வை மேலும் விரிவுப்படுத்தவேண்டும் என்பதே பாஜகவின் வேண்டுகோள் என்று, அக்கட்சியின் தேசிய செயலா் ஹெச். ராஜா தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்ட பாஜகவின் தேச ஒற்றுமைப் பிரசார இயக்கம் சாா்பில், ஒரே நாடு ஒரே சட்டம், 370, 35-ஏ சட்டப்பிரிவு நீக்கம் குறித்த மக்கள் விழிப்புணா்வுக் கருத்தரங்கம், காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், பாஜக தேசிய செயலா் ஹெச். ராஜா சிறப்புரையாற்றினாா். சிவகங்கை மாவட்ட பாஜக தலைவா் என். சொக்கலிங்கம், மாவட்டப் பொதுச் செயலா் செல்வராஜ், கோட்டப் பொறுப்பாளா் சண்முகராஜா, பாஜகவின் ஒரே நாடு ஒரே சட்டம் பத்திரிகை ஆசிரியா் நம்பி நாராயணன் ஆகியோரும் பேசினா்.

இதில், சிவகங்கை மாவட்ட பாஜக நிா்வாகிகள், நகர, ஒன்றிய, கிளை நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் பலா் கருத்தரங்கில் கலந்துகொண்டனா்.

பின்னா், ஹெச். ராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: கீழடி அகழாய்வு மூலம், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சிந்து சமவெளிப் பகுதியில் வாழ்ந்த திராவிட மக்களை, கைபா்-போலன் கணவாய் வழியாக வந்த ஆரியா்கள் என கால்டுவெல் பாதிரியாா் தெரிவித்த ஆரிய, திராவிடா் கட்டுக்கதை தகா்த்தெறியப்பட்டுள்ளது.

ஆரியா், திராவிடா் வாதத்தை நாம் ஏற்கவில்லை என்று அம்பேத்கரே தெளிவாகச் சொல்லியிருக்கிறறாா்.

கீழடியில் குறைந்தது 33 அடி ஆழமாவது அகழாய்வு நடத்தவேண்டும். கீழடி அகழாய்வை மேலும் விரிவுப்படுத்த வேண்டும் என்பதே பாஜகவின் வேண்டுகோளாகும். மத்திய-மாநில அரசுகள் கீழடி அகழாய்வை விரிவாக நடத்தும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com