சென்னை-குமரி தொழில்வழித் தடத்தால் 23 மாவட்டங்கள் பயன்: எம்.சி.சம்பத்

சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தால் 23 மாவட்டங்கள் பயன்பெறும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
கிண்டியில் நடைபெற்ற மெட்ராஸ் தொழில் வர்த்தக சபையின் 183-ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில் துறை செயலர் முருகானந்தம், மெட்ராஸ் தொழில் வர்
கிண்டியில் நடைபெற்ற மெட்ராஸ் தொழில் வர்த்தக சபையின் 183-ஆவது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தொழில் துறை செயலர் முருகானந்தம், மெட்ராஸ் தொழில் வர்

சென்னை-கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்தால் 23 மாவட்டங்கள் பயன்பெறும் என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

மெட்ராஸ் தொழில் வர்த்தக சபையின் (எம்.சி.சி.ஐ.) 183-ஆவது ஆண்டு விழா, சனிக்கிழமை கிண்டியில் நடைபெற்றது. இதில் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியது: 

முதல்வருடனான வெளிநாட்டுப் பயணத்தின்போது சிலிக்கான் வேலியில் உள்ள நிறுவனங்களுடன் சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் மாவட்ட அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைக்க அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த செயல்பாட்டுக்கு விரைவில் அவர்கள் தமிழகத்துக்கு வருகை தர உள்ளனர்.

சென்னை - கன்னியாகுமரி தொழில் வழித்தடத்துக்கு திட்ட மதிப்பீடு தயாராக உள்ளது. இதை செயல்படுத்துவதன் மூலம் 23 மாவட்டங்கள் பயன்பெறும் என்றார்.

இதைத் தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:  சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு 20 மில்லியன் லிட்டர் நீர் தேவைப்படுகிறது. தங்கு தடையின்றி அனைத்து நிறுவனங்களுக்கும் நீர் கிடைக்க வழி வகை செய்துள்ளோம். மேலும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து நிறுவனங்களுக்கு வழங்குவது குறித்தும் திட்டம் வகுத்துள்ளோம். இத்திட்டம் இன்னும் மூன்று மாதத்துக்குள் செயல்படுத்தப்படும்.  மேலும் இந்தத் திட்டத்தை பல்வேறு நகராட்சிகளுக்கும் எடுத்துச் செல்ல உள்ளோம். இதே போல் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி தூத்துக்குடியில் 60 மில்லியன் லிட்டர் நீர் தயாரிக்கவும், கடலூரில் 20 மில்லியன் லிட்டர் நீரும் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் ரூ.8,835 கோடி முதலீடு பெறப்பட்டு உள்ளது. 41 நிறுவனங்கள் இதில் பங்கெடுத்து உள்ளன. இதுகுறித்த அடுத்தகட்ட செயல்பாட்டுக்கு முதல்வர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. விரைவில் அந்நிறுவனங்கள் இங்கு தொழில் தொடங்கும். இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகும். புதியதாக திருவள்ளூர் மாவட்டம் மாணலூரில் 4,000 ஏக்கரில் சிப்காட் நிறுவனம் அமைக்க உள்ளோம். இதில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளைத்  தயாரிக்க  திட்டமிட்டு உள்ளோம் என்றார். 

நிகழ்ச்சியில் தொழில்துறை முதன்மைச் செயலர் முருகானந்தம் பேசியது: 

ஒற்றைச் சாளர முறையில் 50 நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க உதவிகள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த முறையில் 24 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒற்றைச் சாளர முறையில் அனுமதி கோரும் நிறுவனங்களுக்கு ஒரு காலவரையரை வழங்கப்படும். இந்த காலவரையைத் தாண்டியும் அனுமதி பெறுவதில் சிக்கல் நீடிக்கும் நிறுவனங்களுக்கென முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் தனிப் பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் தங்கள் குறைகளை இணையத்தில் தெரிவித்து பயன் பெறலாம் என்றார்.

நிகழ்வில், எம்.சி.சி.ஐ. தலைவர் ராம்குமார் ராமமூர்த்தி, துணைத் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், ராம்கோ சிமென்ட்ஸ் தலைமைச் செயல் அதிகாரி ஏவி தர்மகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com