தமிழுக்கு முதலிடம் கொடுப்பதில் உறுதி: அமைச்சர் ஆர். காமராஜ்

தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் கொடுப்பதில் தமிழக அரசும், அதிமுகவும் என்றைக்கும் உறுதியாக உள்ளது என உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.
தமிழுக்கு முதலிடம் கொடுப்பதில் உறுதி: அமைச்சர் ஆர். காமராஜ்

தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் கொடுப்பதில் தமிழக அரசும், அதிமுகவும் என்றைக்கும் உறுதியாக உள்ளது என உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.

திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம்  அவர் கூறியது: வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், உணவுப் பொருள்களைப் பொருத்தவரை மூன்று மாதங்களுக்குத் தேவையானவை கையிருப்பில் உள்ளன. எனவே, அதைப்பற்றி பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை. நீர் சூழக்கூடிய பள்ளமான இடத்தில் இருக்கிற நியாயவிலைக் கடைகள் பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான கடைகளில் மழைக்காலத்தில் எவ்வாறு, எங்கு வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகிப்பது என்ற முடிவும் சம்பந்தப்பட்ட துறையினரால் எடுக்கப்பட்டுள்ளது. 

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் எவ்வாறு பயன்பெறுவது என்பது பற்றி பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக தொடர்ந்து விழிப்புணர்வு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் காய்ச்சல் என்று உணரப்பட்ட உடன் அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும். 
தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு முதல்வர் அறிவித்தபடி  விரைவில் ரூ. 2,000 வழங்கப்படும். விவசாயிகளுக்குத் தேவையான விதை, உரம், பூச்சி மருந்து ஆகியவை எல்லா கிடங்குகளிலும் போதுமான அளவுக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அதில் எவ்விதக் குறையும் இல்லை.  தாய் மொழியான தமிழுக்கு முதலிடம் கொடுப்பதில் தமிழக அரசும், அதிமுகவும் என்றைக்கும் உறுதியாக உள்ளது. பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்கிறது. நான்குனேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்றார் அமைச்சர் ஆர். காமராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com