சரியாப்போச்சு! இந்த தொழிலிலும் நுழைந்து விட்டார்களா வட மாநில தொழிலாளர்கள்?

ஹோட்டல், கட்டட வேலை என பல வேலைகளில், உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளை எல்லாம் தட்டிப் பறித்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது விவசாயத்திலும் நுழைந்து விட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியு
சரியாப்போச்சு! இந்த தொழிலிலும் நுழைந்து விட்டார்களா வட மாநில தொழிலாளர்கள்?


ஹோட்டல், கட்டட வேலை என பல வேலைகளில், உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளை எல்லாம் தட்டிப் பறித்த வடமாநில தொழிலாளர்கள் தற்போது விவசாயத்திலும் நுழைந்து விட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நல்ல சம்பளம், அதிக வேலை வாய்ப்பு போன்றவற்றால் ஈர்க்கப்பட்ட ஏராளமான வட மாநில இளைஞர்கள் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

கட்டட வேலைகள், ஹோட்டல்கள் என எங்கு பார்த்தாலும் வட இந்திய மாநில இளைஞர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் ஒரு சில கிராமங்களில் விவசாயப் பணிகளிலும் வட இந்திய இளைஞர்கள் நுழைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம் பிள்ளப்பாளையம் பஞ்சாயத்துப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் பிகார் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட வட இந்திய இளைஞர்கள் விவசாயப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

நடவு நடுதல், களைப் பிடுங்குதல் போன்ற பணிகளை அவர்கள் செய்து வருகிறார்கள். 

இது பற்றி அங்கிருந்த இளைஞர்களைக் கூட்டி வந்தவர் கூறுகையில், தற்போது எங்கள் கிராமங்களில் எந்த வேலையும் இல்லை. தமிழகத்தில் விவசாயத்துக்கு அதிகக் கூலி தருகிறார்கள். அதனால் இங்கே வந்தோம் என்கிறார்.

இங்கு இரண்டு மாதங்கள் தங்கியிருந்து விவசாயப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதுபோன்ற வேலைகளை நாங்கள் ஏற்கனவே ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் செய்துள்ளோம் என்கிறார்கள்.

4 ஏக்கர் விவசாய நிலத்துக்குச் சொந்தக்காரரான இன்பராஜ், வடமாநில இந்தியர்களை பணிக்கு வைத்திருப்பது பற்றி கூறுகையில், கடினமாக வேலை செய்கிறார்கள். வேகமாகவும் பணியாற்றுகிறார்கள் என்கிறார்.

உள்ளூர் விவசாயிகளை விட, இவர்களுக்கு மிகக் குறைவாகவே செலவாகிறது. அதுமட்டுமல்ல, உள்ளூர்  கூலி ஆட்களுக்கு காபி, டீ, உணவு எல்லாம் கொடுக்க வேண்டும். இவர்களுக்கு அந்த செலவும் மிச்சம் என்கிறார்.

உள்ளூர் மக்களின் வேலை வாய்ப்புகளை எல்லாம் பறிக்கும் வகையில் வட மாநில இளைஞர்கள் எல்லாத் துறைகளிலும் நுழைந்துவிட்ட நிலையில், தற்போது விவசாயத்திலும் அவர்கள் நுழைந்திருப்பது நிச்சயம் வரமில்லை.. சாபம் என்றுதான் தோன்றுகிறது.

உள்ளூர் மக்களுக்கு இங்கு வேலை வாய்ப்பில்லாத நிலையை ஏற்படுத்திவிட்டால், தமிழக கூலிகள் எல்லாம் வேலை தேடி வெளியூர்தான் செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com