இடைத்தேர்தலில் செலவிட ஒரு ரூபாய் கூட இல்லை.. அதனால்: கே.எஸ். அழகிரி பேச்சு

தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் செலவு செய்ய காங்கிரஸ் கட்சியிடம் ஒரு ரூபாய் கூட இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி பேசியுள்ளார்.
இடைத்தேர்தலில் செலவிட ஒரு ரூபாய் கூட இல்லை.. அதனால்: கே.எஸ். அழகிரி பேச்சு


தமிழகத்தில் நடைபெறும் இடைத்தேர்தலில் செலவு செய்ய காங்கிரஸ் கட்சியிடம் ஒரு ரூபாய் கூட இல்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி பேசியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற காங்கிரஸ் சிறப்பு பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கே.எஸ். அழகிரி, தமிழகத்தில் நடைபெறும் இரண்டு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் லட்சக்கணக்கான பணம் புரளும். ஆனால், தேர்தலில் செலவிட காங்கிரஸ் கட்சியிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. எனவே, காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றால், கட்சித் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழகத்தில் நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நான்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும், விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும் போட்டியிடுகிறது.

நான்குனேரி தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில், ரூபி மனோகரன் (60) போட்டியிடுவார் என்று அகில இந்திய காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்ட அறிவிப்பில், அகில இந்திய தலைவர் சோனியா காந்தி ஒப்புதலுடன் ரூபி மனோகரன் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் போட்டியிடும் நான்குனேரி தொகுதியில் அந்தக் கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் எம்.பி.ஏ. பட்டதாரி.  கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான இவர், ரூபி குழுமங்களின் தலைவராக இருந்து வருகிறார்.

இந்தத் தொகுதியில் போட்டியிட முன்னாள் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். இதில், ரூபி மனோகரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com