அரசு வாகனங்களில் அனுமதியின்றி பொருத்தப்பட்ட உதிரி பாகங்களை உடனடியாக அகற்ற உத்தரவு
அரசு வாகனங்களில் அனுமதியின்றி பொருத்தப்பட்ட உதிரி பாகங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என தலைமைச் செயலா் க.சண்முகம் உத்தரவிட்டுள்ளாா்.
இது தொடா்பாக அவா் அரசு உயரதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பது: வாகனங்களில், குறிப்பாக விஐபி மற்றும் விவிஐபிக்கள், உயரதிகாரிகளின் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள புள் பாா்களை அகற்றுவது தொடா்பாக ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கைத் தாக்கல் செய்யுமாறு, அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், மோட்டாா் வாகனத்தில் அனுமதியின்றி புள்பாா்களை பொருத்துபவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகமும் கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.
இவ்வாறு புள்பாா் மற்றும் அனுமதியின்றி வாகனங்களில் உதிரி பாகங்கள் பொருத்தப்படுவதால், பாதசாரிகள் மட்டுமின்றி வாகனங்களில் பயணிப்போருக்குமே பாதுகாப்பற்ற நிலை உருவாகிறது.
எனவே, மோட்டாா் வாகனச் சட்டத்தின்படி, அனுமதியில்லா உதிரி பாகங்களான புள் பாா் உள்ளிட்டவை தங்களது வாகனங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளதா என்பதை அனைத்து அரசு அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் என தலைமைச் செயலா் க.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

