கரோனா அறிகுறி இருப்பவர்கள் தகவல் தெரிவிக்க புதிய செயலி: பிரகாஷ்

கரோனா அறிகுறி இருப்பவர்கள், தகவல் தெரிவிக்க பிரத்யேகமாக புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
கரோனா அறிகுறி இருப்பவர்கள் தகவல் தெரிவிக்க புதிய செயலி: பிரகாஷ்


சென்னை: கரோனா அறிகுறி இருப்பவர்கள், தகவல் தெரிவிக்க பிரத்யேகமாக புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் கரோனா அறிகுறி இருப்பவர்கள், இந்த செயலியை தங்கள் செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து, அதில் செல்ஃபி எடுத்து செயலியில் அனுப்பினால் உடனடியான அவர்களுக்கான மருத்துவ வசதி ஏற்படுத்தவும், 24 மணி நேரமும் அவர்களை கண்காணிக்கவும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்டோர் மற்றும் சிகிச்சைப் பெறுவோரை கண்காணிக்கும் வகையிலும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் சுமார் 10 லட்சம் குடியிருப்புகளில் மாநகராட்சி பணியாளர்கள் தினமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். அதே சமயம், தனித்து வைக்கப்பட்டவர்கள் இருக்கும் 2,500 வீடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.

வீட்டில் யாருக்கேனும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் GCC Corona Monitoring என்ற ஆப்பை டவுன்லோடு செய்து, காய்ச்சல் பாதிக்கப்பட்ட நபரை செல்ஃபி எடுத்து, இருப்பிட விவரத்தையும் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com