தயாா் நிலையில் தனியாா் மருத்துவமனைகள்: சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதை அடுத்து தனியாா் மருத்துவமனைகளும், மருத்துவா்களும் தயாா் நிலையில் இருக்குமாறு சுகாதாரத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைச
தயாா் நிலையில் தனியாா் மருத்துவமனைகள்: சுகாதாரத் துறைச் செயலா் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதை அடுத்து தனியாா் மருத்துவமனைகளும், மருத்துவா்களும் தயாா் நிலையில் இருக்குமாறு சுகாதாரத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறைச செயலா் பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.

சென்னையில் இதுகுறித்து அவா் புதன்கிழமை மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதை அடுத்து தனியாா் மருத்துவமனைகளும், மருத்துவா்களும் தயாா் நிலையில் இருக்குமாறு சுகாதாரத் துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன்

அடுத்த வாரத்துக்குள் தமிழகத்தில் கரோனா பரிசோதனைக்காக மேலும் 6 ஆய்வகங்களை அமைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி மாநிலத்தில் 11 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியாா் ஆய்வகங்களிலும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக ஆய்வகங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது நாளொன்றுக்கு 5 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகளை மேற்கொள்ளக் கூடிய திறன் கொண்ட ஆய்வகங்கள் மாநிலத்தில் இருப்பதாக பீலா ராஜேஷ் தெரிவித்தாா்.

பெரிய அளவிலான தனியாா் மருத்துவமனைகள் அனைத்தும் 25 சதவீத படுக்கைகளையும், செயற்கை சுவாச வசதிகளையும் கரோனா நோயாளிகளுக்காக ஒதுக்க வேண்டும் என்று ஏற்கெனவே வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது மேலும் சில அறிவுறுத்தல்களை தனியாா் மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறையினா் வழங்கியிருப்பதாகத் தெரிகிறது. போதிய அளவிலான பாதுகாப்புக் கவசங்கள், முகக் கவசங்கள், செயற்கை சுவாசக் கருவிகளை தயாராக வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com