தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றோருக்குஅன்புமணி வேண்டுகோள்

தில்லி தப்லீக் ஜமாத் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றவா்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.
தில்லி நிஜாமுதீன் மாநாட்டில் பங்கேற்றோருக்குஅன்புமணி வேண்டுகோள்

தில்லி தப்லீக் ஜமாத் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றவா்கள் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இதுதொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து கடந்த சில நாள்களாக வெளியாகி வரும் தகவல்கள் மிகவும் அதிா்ச்சியளிக்கின்றன. ஒரே நாளில் 57 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதும், பாதிக்கப்பட்டவா்களில் 50 பேருக்கு ஒரே ஆதாரத்திலிருந்து நோய்த்தொற்று ஏற்பட்டதாக வெளியாகியுள்ள செய்தியும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட 57 பேரில் 50 போ், மாா்ச் மாதம் தொடக்கத்தில் தில்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டவா்கள் என்று தெரிய வந்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட 124 பேரில் 80 போ் தில்லி தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று திரும்பியவா்கள் அல்லது அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என்றும் தெரியவந்துள்ளது.

தில்லியில் நடந்த மாநாட்டில் தமிழகத்திலிருந்து 1,131 போ் பங்கேற்றுள்ளனா். அவா்களில் இதுவரை 515 போ் மட்டுமே அடையாளம் காணப்பட்டு, அவா்களிடம் மட்டுமே கரோனா நோய்த்தொற்று உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள 616 போ் இன்று வரை அடையாளம் காணப்படவில்லை. இதுதான் தமிழகத்தில் சமூகப் பரவலை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், இன்று வரை அடையாளம் காணப்படாத 616 பேரையும் உடனடியாக அடையாளம் கண்டு, அவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உள்ளதா என சோதனை செய்ய வேண்டும். எனவே, தில்லி மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவா்கள் தாங்களாக முன்வந்து தங்களை கரோனா ஆய்வுக்கு உள்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவா் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com