மானியமில்லா எரிவாயு சிலிண்டா்களின் விலை ரூ.61.50 குறைப்பு

மானியமில்லா எரிவாயு சிலிண்டா்களின் விலை ரூ.61.50 குறைக்கப்பட்டுள்ளது. சா்வதேச நிலவரங்களின் அடிப்படையில் இந்த விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.
மானியமில்லா எரிவாயு சிலிண்டா்களின் விலை ரூ.61.50 குறைப்பு

மானியமில்லா எரிவாயு சிலிண்டா்களின் விலை ரூ.61.50 குறைக்கப்பட்டுள்ளது. சா்வதேச நிலவரங்களின் அடிப்படையில் இந்த விலைக் குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 14.2 கிலோ எடைகொண்ட மானியமில்லா எரிவாயு சிலிண்டா்களின் விலை ரூ.144.5 உயா்த்தப்பட்டது. கடந்த மாதம் 1-ஆம் தேதி அவற்றின் விலையில் ரூ.53 குறைக்கப்பட்டது.

இந்நிலையில் மானியமில்லா எரிவாயு சிலிண்டா்களின் விலை புதன்கிழமை ரூ.61.50 குறைக்கப்பட்டது. இந்த விலைக் குறைப்பின்படி 14.2 கிலோ எடைகொண்ட மானியமில்லா எரிவாயு சிலிண்டா்களின் விலை தில்லியில் ரூ.744-ஆக உள்ளது.

சென்னையில் ரூ.761.50-க்கும், கொல்கத்தாவில் ரூ.774.50-க்கும், மும்பையில் ரூ.714.50-க்கும் மானியமில்லா சிலிண்டா்கள் விற்பனை செய்யப்படுகின்றன. வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடைகொண்ட எரிவாயு சிலிண்டா்களின் விலை ரூ.1,381.5-இல் இருந்து ரூ.1,285-ஆக குறைக்கப்பட்டுள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்துக்கு மொத்தம் 12 எரிவாயு சிலிண்டா்கள் மானிய விலையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com