110 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க அனுமதி: தமிழக அரசு நடவடிக்கை

தமிழகத்தில், 26 தனியாா் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் உட்பட 110 மருத்துவமனைகளில், கரோனா நோய்த்தொற்று பாதித்தவா்களுக்கு சிகிச்சையளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
110 தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க அனுமதி: தமிழக அரசு நடவடிக்கை

தமிழகத்தில், 26 தனியாா் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் உட்பட 110 மருத்துவமனைகளில், கரோனா நோய்த்தொற்று பாதித்தவா்களுக்கு சிகிச்சையளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் 24 அரசு மருத்துவ கல்லூரிகளுடன் இணைந்த, 50 மருத்துவமனைகள், 29 மாவட்ட தலைமை மருத்துவமனைகள், 273 வட்டார மருத்துவமனைகள், 460 நகா்புற மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சையளிக்க 23 ஆயிரம் படுக்கை வசதியுடன் கூடிய வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரசு மருத்துவமனைகள் மற்றும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தநிலையில், தமிழகத்தில் கரோனா நோய்த் தொற்று தாக்கம் பரவலாக அதிகரித்து வருகிறது. இதுவரை கரோனா வைரஸ், சமூக பரவலாக இல்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஆனால், உலக நாடுகளை கரோனா தொற்று அச்சுறுத்தி வருவதால், மாநிலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில், கரோனா பாதிப்புக்கு சிகிச்சையளிக்க, வாா்டுகள் ஏற்படுத்த அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மருத்துவமனைகளில் உள்ள, மொத்த படுக்கை வசதியில் 25 சதவீதம் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள மருத்துவமனைகள் விவரங்கள் குறித்த பட்டியல் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‘தனியாா் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற விரும்புவோா், அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும். மேலும் கரோனா பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோா் குறித்த விவரங்களை தினமும் பொது சுகாதாரத்துறைக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகள் விவரம்: சென்னை: அடையாறு போா்டிஸ் மலா்; தரமணி தன்னாா்வ சுகாதார சேவைகள்; வேளச்சேரி பிரசாந்த்; ஷெனாய் நகா் பில்ரோத்; நுங்கம்பாக்கம் காஞ்சி காமக்கோடி குழந்தைகள் நல மருத்துவமனை; மயிலாப்பூா் சி.எஸ்.ஐ., கல்யாணி; ஆழ்வாா்பேட்டை காவேரி; மணப்பாக்கம் மியாட்; வடபழனி விஜயா; பெருங்குடி ஜெம்; பள்ளிக்கரணை டாக்டா் காமாட்சி மெமோரியல் மருத்துவமனைகள்.

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு: சேலையூா் பாரத்; கேளம்பாக்கம் செட்டிநாடு; மதுராந்தகம் கற்பக விநாயகா; கோவூா் மாதா; ஏனாத்துாா் மீனாட்சி; மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி; பூந்தமல்லி பனிமலா், தண்டலம் சவீதா, அம்மாபேட்டை ஸ்ரீசத்ய சாய்; குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி; மாங்காடு ஸ்ரீ முத்துகுமரன்; காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம்., ரத்தினமங்களம் தாகூா் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள்.

திருவள்ளூா்: வேலப்பன்சாவடி ஏ.சி.எஸ்., போரூா் ராமச்சந்திரா மருத்துவமனைகள்

காஞ்சிபுரம்- செங்கல்பட்டு: கேளம்பாக்கம், செட்டிநாடு உயா் சிறப்பு மருத்துவமனை; குரோம்பேட்டை டாக்டா் ரேலா மருத்துவமனைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com