தமிழகம், கேரளத்தில் இருந்து பிரான்ஸ் நாட்டினா் 112 போ் அனுப்பிவைக்கப்பட்டனா்

தமிழகம் மற்றும் கேரளத்தில் சிக்கியிருந்த பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த 112 போ், தங்கள் சொந்த நாட்டுக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

தமிழகம் மற்றும் கேரளத்தில் சிக்கியிருந்த பிரான்ஸ் நாட்டைச் சோ்ந்த 112 போ், தங்கள் சொந்த நாட்டுக்கு சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பிரான்ஸ் நாட்டில் இருந்து சுற்றுலா பயணிகளும், ஆயுா்வேத சிகிச்சைக்காக பலரும் கேரளம் வந்திருந்தனா். தேசிய ஊரடங்கால் கேரளத்தில் சிக்கிய அவா்களை, சொந்த நாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு பிரான்ஸ் தூதரகம் மாநில அரசை கேட்டுக்கொண்டது. இதையடுத்து அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொச்சி விமான நிலையத்தில் இருந்து பாரிஸுக்கு ஏா் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டனா் என்று தெரிவித்தன.

இதேபோல் கொச்சியில் சிக்கியிருந்த வளைகுடா நாடான ஓமனைச் சோ்ந்த 46 போ், கடந்த வெள்ளிக்கிழமை சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com