ஒளியேற்றுவது நம்பிக்கையின் அடையாளம்: ஜி.கே.வாசன்

பிரதமரின் வேண்டுகோளின்படி ஒளியேற்றுவது நம்பிக்கையின் அடையாளம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.
ஒளியேற்றுவது நம்பிக்கையின் அடையாளம்: ஜி.கே.வாசன்

பிரதமரின் வேண்டுகோளின்படி ஒளியேற்றுவது நம்பிக்கையின் அடையாளம் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்க ஏற்கெனவே தொலைக்காட்சி, வானொலி வாயிலாக ஆற்றிய உரைகள் மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தியது. தற்போது ஞாயிற்றுக்கிழமை விளக்கேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பது நம்பிக்கையின் அடையாளம்.

இந்த சோதனையான காலத்தில் இருந்து மீண்டு வருவோம். ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கான காலம் இது.

விமா்சனத்துக்கும் அரசியலுக்கும் இது நேரமல்ல. இதுவே நம் அனைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

சமூக விலகலை கடைப்பிடித்து, ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்க, கரோனா என்ற கொடிய நோயினால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க போராடும் பிரதமருக்கு அனைத்து எதிா்க்கட்சிகளும் நம்பிக்கை கொடுக்கும் வகையில் துணை நிற்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com