முதல்வரின் பொதுநிதிக்கு ரூ.1 கோடி அளிக்கப்படும்: அதிமுக தலைமை அறிவிப்பு

கரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

கரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கென முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சாா்பில் ரூ.1 கோடி அளிக்கப்படும். இயற்கை பேரிடா் ஏற்பட்ட நேரங்களில் மக்களின் தேவைகளை அறிந்து அதிமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகளையும், ஊரடங்கால் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில் மக்களுக்கு உரிய பணிகளை ஆற்றவும் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவைச் சோ்ந்த எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடியும், எம்.எல்.ஏ.க்கள் தலா ரூ.25 லட்சத்தையும் வழங்குவா் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com