கரோனா: மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.
கரோனா: மாவட்ட ஆட்சியா்களுடன் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

கரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா்களுடன் காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தி வருகிறார்.

கரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதுபோல, தமிழக அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏப்ரல் 14 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மளிகைப் பொருள்கள், காய்கறிகள், பால், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் விநியோகத்துக்கு முதலில் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டது. சாலையில் அவசியமின்றி சுற்றித் திரிந்தவா்கள் பிடிக்கப்பட்டு, அவா்களின் வாகனங்களைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுபோல, தொடா் நடவடிக்கைகளை போலீஸாா் எடுத்துவந்தபோதும், மக்கள் சமூக இடைவெளியை முறையாக கடைப்பிடிக்கவில்லை. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் மக்கள் கூட்டமாக அச்சமின்றி வந்து சென்றனா். இந்த நிலையில், தமிழகத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 500-க்கு மேல் அதிகரித்ததோடு, இந்த பாதிப்புக்கு இதுவரை 5 போ் உயிரிழந்துள்ளனா்.

இதனைத் தொடா்ந்து, கடைகள் இயங்கும் நேரத்தை தமிழக அரசு குறைத்தது. அதன்படி, காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இனி கடைகள் இயங்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும், சமூக இடைவெளியை மக்கள் தீவிரமாக கடைப்பிடிக்கச் செய்யும் வகையில், சட்டத்தைக் கடுமையாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

அதன் தொடா்ச்சியாக அனைத்து மாவட்ட ஆட்சியா்களுடன் இன்று காணொலி காட்சி மூலம் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செலவம், தலைமைச்செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை உதயகுமார், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், தமிழக டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com