பாக்குமட்டைத் தட்டுகள் தயாரிப்பு தொழில் முடக்கம்: 10,000 பேர் வேலையிழப்பு

பாக்குமட்டைத் தட்டுகள் தயாரிப்பு தொழில் முடக்கம்: 10,000 பேர் வேலையிழப்பு

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், பாக்குமட்டைத் தட்டுத் தயாரிப்பு தொழில் முடங்கியுள்ளது. 

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், பாக்கு மட்டைத் தட்டு தயாரிப்பு தொழில் முடங்கியுள்ளது. 

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு மட்டுமின்றி, இத்தாலி, ஜெர்மன் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி அடியோடு தடைப்பட்டுப் போனது. இதனால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர். ரூ. 2 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் பாக்கு உற்பத்தியில் 10 சதம் வரை தமிழகத்தில் விளைகிறது. தமிழகத்தில் 35 சதம் அளவிற்கு சேலம் மாவட்டத்தில் உற்பத்தியாகிறது. சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், அயோத்தியாப்பட்டணம், நரசிங்கபுரம், ஏத்தாப்பூர், கருமந்துறை, தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதியில், ஆண்டு முழுவதும் நீர்ப்பாசன வசதி கொண்ட நன்செய் விவசாயிகள், 5,000 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவிற்கு, பாக்கு மரத் தோப்புகளை உருவாக்கி 30 ஆண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் விளையும் பாக்குக்காய்களை அறுவடை செய்து பதப்படுத்தி ஆப்பி என குறிப்பிடப்படும் கொட்டைப்பாக்கு மற்றும் தாம்பூல கழிப்பாக்கு தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும், ஏறக்குறைய ரூ. 500 கோடி அளவிற்குப் பாக்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

பாக்குமரத்தில் இருந்து உதிர்ந்து விழும் பாக்கு மட்டைகளைச் சேகரித்துப் பதப்படுத்தி பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வெப்ப மூட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலைப் பாதிக்காத பாக்குமட்டைத் தட்டுகள், சிற்றுண்டி கிண்ணங்கள், தண்ணீர் குவளைகள் மற்றும் தேக்கரண்டிகள் தயாரித்து விற்பனை செய்யும் தொழில், கடந்த 10 ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி பெற்றது. பாக்குமட்டையை சேகரிக்கும் கூலித்தொழிலாளர்கள், பாரம் ஏற்றுவோர், வாகன ஓட்டுநர்கள், வியாபாரிகள், தட்டுகள் தயாரிக்கும் சிறு தொழில் முனைவோர் உட்பட இத்தொழிலில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

வாழப்பாடி அடுத்த படையாச்சியூர் கிராமத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பாக்கு மட்டைகள்
வாழப்பாடி அடுத்த படையாச்சியூர் கிராமத்தில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பாக்கு மட்டைகள்

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதால், அனைத்து மாநிலங்களிலும் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் மட்டுமின்றி, பாக்குமட்டை தட்டுகளை விரும்பி வாங்கி பயன்படுத்தி வந்த இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் கரோனா பாதிப்பால் ஏற்றுமதி முழுமையாக தடைப்பட்டுள்ளது.  

இதனால் பாக்கு மட்டை தயாரித்து விற்பனை செய்யும் சிறு தொழில் அடியோடு முடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இத்தொழிலில் ஈடுபட்டிருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். 15 நாட்களில் மட்டும் ரூ 2 கோடி அளவிற்குப் பாக்குமட்டை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

கிடங்கில் தேங்கி கிடக்கும் பாக்குமட்டை தட்டுகள்
கிடங்கில் தேங்கி கிடக்கும் பாக்குமட்டை தட்டுகள்

இதுகுறித்து பாக்கு மட்டை தட்டுகள் தயாரிக்கும் சிறுதொழில் முனைவோரான படையச்சூர் கர்ணன் (35) கூறியதாவது:

விவசாயிகளிடம் இருந்து பாக்கு மட்டைகளை வாங்கி பதப்படுத்தி, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நவீன இயந்திரங்களை பயன்படுத்தி, தட்டு, கிண்ணம் போன்ற பல்வேறு வடிவங்களில் பாக்கு மட்டைகளைத் தட்டுகளைத் தயாரித்து  அனுப்பி வந்தோம். கரோனா வைரஸ் பரவலால் இத்தொழில் அடியோடு முடங்கியுள்ளது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலையிழந்துள்ளனர்.

தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு மட்டுமின்றி இத்தாலி, ஜெர்மன் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதும் தடைப்பட்டுப் போனதால், உற்பத்தி செய்யப்பட்டுள்ள லட்சக்கணக்கில் பாக்குமட்டை தட்டுகள் விற்பனை செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், சேலம் மாவட்டத்தில் மட்டும் ரூ.2 கோடிக்கு மேல் பாக்குமட்டை தட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது’ என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com