ஒசூரில் ரூ.1000 கோடி வாகன உற்பத்தி முடக்கம்: 3 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஒசூரில் உள்ள தொழில்சாலைகள் அனைத்தும் மூடியுள்ளதால்
ஒசூரில் ரூ.1000 கோடி வாகன உற்பத்தி முடக்கம்: 3 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு

கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஒசூரில் உள்ள தொழில்சாலைகள் அனைத்தும் மூடியுள்ளதால், தினமும் ரூ.1000 கோடி வாகன உற்பத்தி முடங்கியுள்ளது. இதனால் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வட மாநில தொழிலாளர்கள் தங்களது மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ள தொழில் நகரமான ஒசூரில் 4 சக்கர வாகனங்களை உற்பத்தியை செய்யும் இந்துஜா குழுமத்தின் அசோக் லேலண்ட் முதல் யூனிட், மற்றும் 2 வது யூனிட் தொழில்சாலைகளில் உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளதால் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

இதேபோன்று இரு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் டி.வி.எஸ். நிறுவனம் தங்களது இரு சக்கர வாகன உற்பத்தி தொழில்சாலை மற்றும் ஆட்டோ போன்ற மூன்று சக்கர வாகன உற்பத்தி தொழில்சாலைகள் மூடி தொழிலாளர்களுக்கு விடுமுறையை அறிவித்துவிட்டு உற்பத்தியை நிறுத்தியுள்ளது. இதனால் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இன்றி வீட்டில் முடங்கியுள்ளனர்.

இதுபோன்று உலக பிரசித்தி பெற்ற டாடா நிறுவனமான டைட்டான் வாட்ச் மற்றும் தனீஷ்க் தங்க நகை ஆபரண உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவுகளை மூடியுள்ளன. இதனால் முடங்கிய தொழிலாளர்கள் எண்ணிக்கை சுமார் 5 ஆயிரம். இதேபோன்று கார் என்ஜின் உற்பத்தி செய்து வரும் ஆவ்டெக், ராணுவ தடவாள வாகனங்களை உற்பத்தி செய்யும் டட்ரா உத்வேக் போன்ற பெரிய தொழில்சாலைகள் முடப்பட்டுள்ளதால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

வேலை இன்றி தவிக்கும் 3 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களும், 3 லட்சம் தொழிலாளர்களும் இந்த பெரிய தொழில்சாலைகளையே நம்பி அந்த பெரிய தொழில்சாலைகளுக்கு உதிரி பாகங்களை தயாரித்து கொடுக்கும் வேலை செய்து வரும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் தாங்களாகவே தொழில்சாலைகளை மூடிவிட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டன.

பெரிய தொழில்சாலைகளே மூடியுள்ளதால் அவர்கள் உதிரி பாகங்களை சப்ளை செய்ய முடியாமல் பண முடக்கத்துடன் உதிரி பாகங்களை தங்களது தொழில்சாலைகளில் வைத்துள்ளதால் கடனில் கச்சா பொருள்களை வாங்கியவர்கள் கடனை திருப்பி செலுத்தவும் முடியாமல், உதிரி பாகங்களை சப்ளை செய்யவும் முடியாமல் சிறு தொழில் நிறுவனங்கள் அவதியுற்று வருகின்றனர். குறிப்பாக சில சிறு தொழில் நிறுவனங்கள் வாடகையில் இயங்கி வருகின்றனர். தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு பின் தொழில்சாலைகளுக்கான வாடகை கேட்டு வருவதால் சிறு தொழில் நிறுவனங்களை சொல்ல முடியாத துயரத்தில் ஆழந்துள்ளனர்.

ஒசூர் ஏற்கனவே உயர் மதிப்பு ரூபாய் நோட்டுக்கள் செல்லத் தக்கவை என்ற அறிவிப்பு, 18 சதவிகிதமாக இருந்த வரியை ஜி.எஸ்.டி மாற்றம் செய்தபோது 28 சதவிகிதமாக உயர்த்தியதால் 960 சிறு மற்றும் குறு நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களாக ஜி.எஸ்.டி வரி செலுத்தமுடியவில்லை என அறிவித்து மூடியுள்ளதாக ஹோஸ்டியா தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு சிறு மற்றும் குறுந் தொழில்சாலைகள் சங்கத்தின் தலைவர் வெற்றி.ஞானசேகரன் நமது தினமணிக்கு தெரிவித்தது. மிகவும் சிறப்பாக இயங்கி வந்த வாகன உற்பத்தி தொழில் நகரமான ஒசூர் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறையில் மத்திய அரசு தவறு செய்துள்ளதை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை எடுக்காததால் சிறு தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளன. இந்நிலையில் இந்த கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையால் பெரிய மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளதால் தினமும் ரூ.1000 கோடிக்கு உற்பத்தி முடங்கியுள்ளது. இது ஊரடங்கு தொடருமானால் சிறு தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து நடத்த முடியாது சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்றார்.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com