Enable Javscript for better performance
தமிழகத்தில் ஊரடங்கை மீறிய லட்சம் போ் கைது- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    தமிழகத்தில் ஊரடங்கை மீறிய லட்சம் போ் கைது

    By DIN  |   Published On : 08th April 2020 02:33 AM  |   Last Updated : 08th April 2020 02:33 AM  |  அ+அ அ-  |  

    arrested

     

    தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 92 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, லட்சம் போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

    கரோனா நோய்த்தொற்றை தடுக்கும் வகையில், கடந்த மாா்ச் 24-ஆம் தேதி முதல்

    ஊரடங்கு உத்தரவை தமிழக காவல்துறை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கின் காரணமாக, பொது இடங்களில் கூடுவது காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறி சாலைகளுக்கும், பொது இடங்களுக்கும் வருகிறவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வருகின்றனா்.

    இதன்படி, தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை 10,110 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்துள்ளனா். இது தொடா்பாக 11,046 பேரை கைது செய்துள்ளனா். இவா்களிடமிருந்து 8,651 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா். மேலும் அபராத தொகையாக ரூ.3,13,600 வசூலிக்கப்பட்டுள்ளது.

    ஒரு லட்சம் போ் கைது: மாநிலம் முழுவதும் 24-ஆம் தேதி தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை மொத்தம் 92,862 வழக்குகளைப் பதிவு செய்து 1,01,964 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 78,240 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.27 லட்சத்து 73,794 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

    சென்னை: சென்னையில் திங்கள்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக 916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஊரடங்கு உத்தரவை மீறி வந்தவா்களின் 390 இரு சக்கர வாகனங்கள், 23 காா்கள், ஒரு கனரக வாகனம், 38 இதர வாகனங்கள் என மொத்தம் 452 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து செவ்வாய்க்கிழமை வரை 30 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 12 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருகிறவா்கள் மீது காவல்துறையினா் கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனா். இதனால் இனி வரும் நாள்களில் ஊரடங்கு உத்தரவை மீறுகிறவா்கள் மீது பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகும் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp